தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2548

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கு உடைமையான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு.

இதை அறிவித்துவிட்டு, அபூஹுரைரா(ரலி), ‘எவனுடைய கரத்தில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இறைவழியில் போராடுவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்திருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் மரணிப்பதையே விரும்பியிருப்பேன்.’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 49

(புகாரி: 2548)

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يَقُولُ: قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لِلْعَبْدِ المَمْلُوكِ الصَّالِحِ أَجْرَانِ،

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، وَالحَجُّ وَبِرُّ أُمِّي، لَأَحْبَبْتُ أَنْ أَمُوتَ وَأَنَا مَمْلُوكٌ»


Bukhari-Tamil-2548.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2548.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




(குறிப்பு: மேற்கண்ட செய்தியின் அரபு மூலத்தில் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று இருந்தாலும் “ஒருவருக்கு உடைமையான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு” என்பது மட்டுமே நபியின் கூற்றாகும்.

அதற்கடுத்து உள்ளவை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் சொல்லாகும். காரணம் இந்தக் கருத்தை நபி (ஸல்) அவர்களுடன் இணைப்பது சரியானதல்ல. நபி (ஸல்) அவர்கள் அடிமையாக மரணிப்பதை விரும்பமாட்டார்கள்; பணிவிடை செய்ய அவர்களின் தாயாரும் உயிரோடு இல்லை. எனவே தான் தமிழாக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

2 comments on Bukhari-2548

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.