அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, நான் உரிமைபெற செலுத்தும் கடன்தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்! என்று கூறினார்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள், எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத்தந்த சில வார்த்தைகளை உனக்கு கற்றுத்தருகிறேன். (அதனை நீ அல்லாஹ்விடம் கேட்டால்) தய்யி கூட்டத்தின் (ஸீர்) மலையளவு கடன் இருந்தாலும் அந்தக்கடனை அல்லாஹ் நீக்குவான் என்று கூறிவிட்டு,
அல்லாஹும் மக்ஃபினீ பி ஹலாலிக்க அன் ஹராமிக்க, வ அஃக்னினீ பி ஃபள்லிக்க அம்மன் ஸிவாக்க என்பதைக் கூறு என்று கூறினார்கள்.
பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக
அறிவிப்பவர்: அபூவாயில் (ரஹ்)
(திர்மிதி: 3563)بَابٌ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَيَّارٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَلِيٍّ،
أَنَّ مُكَاتَبًا جَاءَهُ فَقَالَ: إِنِّي قَدْ عَجَزْتُ عَنْ مُكَاتَبَتِي فَأَعِنِّي، قَالَ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صِيرٍ دَيْنًا أَدَّاهُ اللَّهُ عَنْكَ، قَالَ: ” قُلْ: اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3563.
Tirmidhi-Shamila-3563.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3515.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21458-அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் பற்றி, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஸாஜீ போன்றோர் இவர் ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர் என்றும், - இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
போன்ற பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/486, தக்ரீபுத் தஹ்தீப்-1/570)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-1319 , திர்மிதீ-3563 , முஸ்னத் பஸ்ஸார்-563 , ஹாகிம்-1973 ,
சமீப விமர்சனங்கள்