தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2598

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்புச் செய்து, அல்லது அன்பளிப்புச் செய்வதாக வாக்களித்து, அன்பளிப்பு தன்னிடம் வந்து சேருவதற்கு முன்பே (அன்பளிப்புச் செய்ய வாக்களித்தவர் அல்லது வாக்களிக்கப்பட்டவர்) இறந்து விட்டால்…

(வாக்களித்தவர், வாக்களிக்கப்பட்டவர் இருவருமே இறந்து விட்டால், அன்பளிப்புப் பெறுபவர் உயிராயிருந்த போதே அன்பளிப்புப் பொருள் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததெனில் அது அன்பளிப்புப் பெறுபவருடைய வாரிசுகளுக்குரியதாகும்.

அன்பளிப்புப் பெறுபவர் உயிராயிருந்த போது அன்பளிப்புப் பொருள் (அவருக்கென்று) தனியாக எடுத்து வைக்கப்படவில்லை யென்றால் அது அன்பளிப்புச் செய்தவரின் வாரிசுகளுக்குரியதாகும் என்று அபீதா பின் அம்ரு (ரஹ்) கூறுகின்றார்கள்.

இருவரில் எவர் முதலில் இறந்தாலும் அன்பளிப்புப் பொருளை அன்பளிப்புப் பெறுபவரின் தூதர் கைவசம் பெற்றுக் கொண்டிருந்தால் அது அன்பளிப்புப் பெற்றவரின் வாரிசுகளுக்குரியதேயாகும் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

 ஜாபிர்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் பஹ்ரைனின் நிதி வந்து விட்டால் நான் உனக்கு இவ்வளவு தருவேன் என்று மூன்று முறை கூறினார்கள். ஆனால், அந்த நிதி வருவதற்குள் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள். அப்போது (ஆட்சித் தலைவராகத் தேர்வு பெற்ற) அபூபக்ர் (ரலி) அவர்கள், எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாக்களித்திருந்தால் அல்லது எவருக்காவது அவர்கள் பாக்கி வைத்திருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் என்று (பொது) அறிவிப்புச் செய்யும்படி பறையறிவிப்பவருக்குக் கட்டளையிட, அவர் அவ்வாறே அறிவித்தார்.

ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, எனக்கு (பஹ்ரைனின் நிதியிலிருந்து) தருவதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்திருந்தார்கள் என்று கூறினேன். இதைக் கேட்ட அவர்கள் எனக்கு (நிதியை) மூன்று முறை கைகளால் அள்ளிக் கொடுத்தார்கள்.
Book : 50

(புகாரி: 2598)

بَابُ إِذَا وَهَبَ هِبَةً أَوْ وَعَدَ عِدَةً، ثُمَّ مَاتَ قَبْلَ أَنْ تَصِلَ إِلَيْهِ

وَقَالَ عَبِيدَةُ: «إِنْ مَاتَ وَكَانَتْ فُصِلَتِ الهَدِيَّةُ، وَالمُهْدَى لَهُ حَيٌّ فَهِيَ لِوَرَثَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ فُصِلَتْ فَهِيَ لِوَرَثَةِ الَّذِي أَهْدَى»

وَقَالَ الحَسَنُ: «أَيُّهُمَا مَاتَ قَبْلُ فَهِيَ لِوَرَثَةِ المُهْدَى لَهُ، إِذَا قَبَضَهَا الرَّسُولُ»

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ المُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ جَاءَ مَالُ البَحْرَيْنِ أَعْطَيْتُكَ هَكَذَا – ثَلاَثًا»، فَلَمْ يَقْدَمْ حَتَّى تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ أَبُو بَكْرٍ مُنَادِيًا فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ أَوْ دَيْنٌ، فَلْيَأْتِنَا، فَأَتَيْتُهُ، فَقُلْتُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَدَنِي فَحَثَى لِي ثَلاَثًا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.