தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2612

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 எதை அணிவது வெறுக்கத் தக்கதோ அதை அன்பளிப்பாக வழங்குதல்.

 இப்னு உமர்(ரலி) கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் நுழைவாயிலருகே பட்டு அங்கி விற்கப்படுவதைக் கண்டு அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் வாங்கி, ஜும்ஆ நாளிலும், தூதுக் குழுக்கள் உங்களைச் சந்திக்க வரும் போதும் அணிந்து கொண்டால் நன்றாயிருக்குமே என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார் என்று கூறினார்கள். பிறகு, சில பட்டு அங்கிகள் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றிலிருந்து ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களா? -உTதாரிdதுடைய- அங்கியின் விஷயத்தில் நீங்கள் முன்பு ஒரு விதமாகச் சொன்னீர்களே என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இதை நீங்கள் அணிந்து கொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவிலிருந்த, இணைவைப்பவரான தன் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்கள்.
Book : 50

(புகாரி: 2612)

بَابُ هَدِيَّةِ مَا يُكْرَهُ لُبْسُهَا

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

رَأَى عُمَرُ بْنُ الخَطَّابِ حُلَّةً سِيَرَاءَ عِنْدَ بَابِ المَسْجِدِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوِ اشْتَرَيْتَهَا، فَلَبِسْتَهَا يَوْمَ الجُمُعَةِ وَلِلْوَفْدِ، قَالَ: «إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ»، ثُمَّ جَاءَتْ حُلَلٌ، فَأَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ مِنْهَا حُلَّةً، وَقَالَ: أَكَسَوْتَنِيهَا، وَقُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ؟ فَقَالَ: «إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا»، فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.