நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். ஆனால் முஃபஸ்ஸலான (நடுத்தர) அத்தியாயங்களிருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை.
அல்அஃராஃப் (7), ரஃது (13), நஹ்ல் (16), பனீ இஸ்ராயீல் (17), மர்யம் (19), ஹஜ் (22), ஃபுர்கான் (25), ஸுலைமான் அலை அவர்களின் வரலாறு இடம்பெறும் நம்ல் (27), ஸஜ்தா (32), ஸாத் (38), ஹாமீம் (41) ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
(பைஹகீ-குப்ரா: 3704)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أنبأ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ الْفَقِيهُ، أنبأ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَهْلٍ الْمُطَرِّزُ ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى، ثنا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، ثنا عُثْمَانُ بْنُ فَائِدٍ، عَنْ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنِ الْمَهْدِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُبَيْدٍ، حَدَّثَتْنِي عَمَّتِي أُمُّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ:
سَجَدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً لَيْسَ فِيهَا مِنَ الْمُفَصَّلِ شَيْءٌ: الْأَعْرَافَ، وَالرَّعْدَ، وَالنَّحْلَ، وَبَنِي إِسْرَائِيلَ، وَمَرْيَمَ، وَالْحَجَّ سَجْدَةً، وَالْفُرْقَانَ، وَسُلَيْمَانَ بِسُورَةِ النَّمْلِ، وَالسَّجْدَةَ، وَص، وَسَجْدَةَ الْحَوَامِيمِ
كَذَا رُوِيَ بِهَذَا الْإِسْنَادِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-3704.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-3412.
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ உஸ்மான் பின் ஃபாஇத் என்பவர் பற்றி துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார். - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவரைப் பற்றி விமர்சனம் உள்ளது (அதாவது இவரின் செய்திகளை ஏற்கக்கூடாது) என்று கூறியுள்ளார். - இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர், இவர் பலமானவர்கள் வழியாக முன்கதிஃயான செய்திகளை அறிவிப்பவர் என்று கூறியுள்ளனர். - முஹம்மத் பின் அலீ அன்னக்காஷ் அவர்கள், இவர் பலமானவர்கள் வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
- தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரின் சில செய்திகளின் மூலம் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-19/474, அல்இக்மால்-9/180, அல்காஷிஃப்-3/393, தஹ்தீபுத் தஹ்தீப்-3/76, தக்ரீபுத் தஹ்தீப்-1/668)
- 2 . மேலும் இதில் வரும் ராவீ மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உயைனா பின் காத்திர் என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/976)
மேலும் பார்க்க: திர்மிதீ-568 .
சமீப விமர்சனங்கள்