தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2648

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 (விபசாரம் புரிந்ததாக ஒருவர் மீது) அவதூறு கூறியவன், திருடன் மற்றும் விபசாரியின் சாட்சியம்.

அல்லாஹ் கூறுகிறான்:

கற்புள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லி விட்டுப் பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களுக்கு எண்பது சாட்டையடிகளைக் கொடுங்கள். இனி அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். இந்தக் குற்றத்திற்குப் பிறகு பாவ மன்னிப்புக் கோரி தங்களைச் சீர்திருத்திக் கொண்ட வர்களைத் தவிர. ஏனெனில், அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். (24:4,5)

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் விபசாரம் புரிந்ததாக, அவர் மீது அவதூறு கூறியதற்காக அபூபக்ரா (ரலி), ஷிப்ல் பின் மஅபத் (ரலி), நாஃபிஉ பின் ஹாரிஸ் (ரலி) ஆகியோருக்கு உமர் (ரலி) அவர்கள் கசையடி கொடுத்தார்கள். பிறகு, அவர்களிடம் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரும்படி கேட்டார்கள். மேலும், எவர் பாவ மன்னிப்புக் கோரி திருந்திவிடுகின்றாரோ அவரது சாட்சியத்தை நான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்), உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), சயீத் பின் ஜுபைர் (ரஹ்), தாவூஸ் பின் கைஸான் அல் யமானீ (ரஹ்), முஜாஹித் (ரஹ்), ஷஅபீ (ரஹ்), இக்ரிமா (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்),முஹாரிப் பின் திஸார் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்), முஆவியா பின் குர்ரா (ரஹ்) ஆகியோர், ஒருவர் விபசாரம் செய்ததாக அவதூறு கற்பித்து, அதற்காகக் கசையடி தண்டனை பெற்றவர் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிட்டால் அவரது சாட்சியத்தை ஏற்றுக் கொள்வது செல்லும் என்று கூறியுள்ளனர்.

அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள், மதீனா நகரில் எங்கள் நடைமுறை எப்படி இருந்ததென்றால், அவதூறு கற்பித்தவர் தன் சொல்லைத் திரும்பப் பெற்று, பாவ மன்னிப்புக் கோரி விட்டால் அவரது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.

ஷஅபீ (ரஹ்), கதாதா (ரஹ்) ஆகிய இருவரும், அவதூறு கற்பித்தவன், தான் பொய் சொல்லி விட்டதாகக் கூறி விட்டால் கசையடி கொடுக்கப்படுவான்; அவனது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுகின்றனர்.

ஓர் அடிமை (அவதூறு கற்பித்த குற்றத்திற்காக) கசையடி கொடுக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டால் அவனது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும். அவனிடம் தீர்ப்புக் கேட்கப்பட்டு அவன் தீர்ப்பு வழங்கினால் அவனுடைய தீர்ப்புகள் செல்லும் என்று சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

சிலர் அவதூறு கூறியவனின் சாட்சியம் அவன் பாவமன்னிப்புக் கோரி விட்டாலும் கூட ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறிவிட்டு, பிறகு, திருமணம் இரண்டு சாட்சிகள் இல்லாமல் செல்லுபடியாகாது. (அவதூறு பேசி) கசையடி கொடுக்கப்பட்டவர்கள் இருவரின் சாட்சியைக் கொண்டு ஒருவன் மணமுடித்துக் கொண்டால் அந்தத் திருமணம் செல்லுபடியாகும். இரண்டு அடிமைகளின் சாட்சியத்தைக் கொண்டு மணமுடித்துக் கொண்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று கூறினார்கள்.

கசையடி கொடுக்கப்பட்டவன், அடிமை மற்றும் அடிமைப் பெண் ஆகியோர் ரமளான் மாதப் பிறையைப் பார்த்ததாக சாட்சியம் அறிவித்தால் அது செல்லும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவதூறு கற்பித்தவன் பாவ மன்னிப்புக் கோரிவிட்டதை எப்படி அறிந்து கொள்வது?

நபி (ஸல்) அவர்களோ விபசாரியை ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள், கஅப் பின் மாலிக் (ரலி) மற்றும் அவர்களுடைய இரு தோழர்களுடன் பேசக் கூடாது என்று (மக்களைத்) தடை செய்தார்கள்;ஐம்பது நாட்கள் கழியும் வரை இவ்வாறு தடை செய்து வைத்திருந்தார்கள்.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

மக்காவை வெற்றி கொண்ட போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த்து அஸ்வத் என்னும் பெயருடைய) திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரின் கையைத் துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரின் கை துண்டிக்கப்பட்டது.
(அவரைப் பற்றி) ‘அவள் அழகிய முறையில் தவ்பா செய்திருந்தாள்; திருமணமும் செய்தாள். அதன் பிறகு அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை (அறிந்து) நபி(ஸல்) அவர்களிடம் சொல்வேன்’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்.
Book : 52

(புகாரி: 2648)

بَابُ شَهَادَةِ القَاذِفِ وَالسَّارِقِ وَالزَّانِي

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلاَ تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا، وَأُولَئِكَ هُمُ الفَاسِقُونَ إِلَّا الَّذِينَ تَابُوا} [النور: 5]

وَجَلَدَ عُمَرُ، أَبَا بَكْرَةَ، وَشِبْلَ بْنَ مَعْبَدٍ، وَنَافِعًا بِقَذْفِ المُغِيرَةِ، ثُمَّ اسْتَتَابَهُمْ، وَقَالَ: «مَنْ تَابَ قَبِلْتُ شَهَادَتَهُ»

وَأَجَازَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُتْبَةَ، وَعُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ، وَسَعِيدُ بْنُ جُبَيْرٍ، وَطَاوُسٌ، وَمُجَاهِدٌ، وَالشَّعْبِيُّ، وَعِكْرِمَةُ، وَالزُّهْرِيُّ، وَمُحَارِبُ بْنُ دِثَارٍ، وَشُرَيْحٌ، وَمُعَاوِيَةُ بْنُ قُرَّةَ

وَقَالَ أَبُو الزِّنَادِ: «الأَمْرُ عِنْدَنَا بِالْمَدِينَةِ إِذَا رَجَعَ القَاذِفُ عَنْ قَوْلِهِ، فَاسْتَغْفَرَ رَبَّهُ، قُبِلَتْ شَهَادَتُهُ»

وَقَالَ الشَّعْبِيُّ، وَقَتَادَةُ: «إِذَا أَكْذَبَ نَفْسَهُ جُلِدَ، وَقُبِلَتْ شَهَادَتُهُ»

وَقَالَ الثَّوْرِيُّ: ” إِذَا جُلِدَ العَبْدُ ثُمَّ أُعْتِقَ جَازَتْ شَهَادَتُهُ، وَإِنِ اسْتُقْضِيَ المَحْدُودُ فَقَضَايَاهُ جَائِزَةٌ

وَقَالَ بَعْضُ النَّاسِ: ” لاَ تَجُوزُ شَهَادَةُ القَاذِفِ وَإِنْ تَابَ، ثُمَّ قَالَ: لاَ يَجُوزُ نِكَاحٌ بِغَيْرِ شَاهِدَيْنِ، فَإِنْ تَزَوَّجَ بِشَهَادَةِ مَحْدُودَيْنِ جَازَ، وَإِنْ تَزَوَّجَ بِشَهَادَةِ عَبْدَيْنِ  لَمْ يَجُزْ، وَأَجَازَ شَهَادَةَ المَحْدُودِ وَالعَبْدِ وَالأَمَةِ لِرُؤْيَةِ هِلاَلِ رَمَضَانَ «وَكَيْفَ تُعْرَفُ تَوْبَتُهُ»

وَقَدْ نَفَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّانِيَ سَنَةً وَنَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ: كَلاَمِ سَعْدِ بْنِ مَالِكٍ وَصَاحِبَيْهِ حَتَّى مَضَى خَمْسُونَ لَيْلَةً

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ

«أَنَّ امْرَأَةً سَرَقَتْ فِي غَزْوَةِ الفَتْحِ، فَأُتِيَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَمَرَ بِهَا، فَقُطِعَتْ يَدُهَا»، قَالَتْ عَائِشَةُ: فَحَسُنَتْ تَوْبَتُهَا، وَتَزَوَّجَتْ، وَكَانَتْ تَأْتِي بَعْدَ ذَلِكَ، فَأَرْفَعُ حَاجَتَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.