தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2655

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 கண் பார்வையற்றவரின் சாட்சியம், அவரது நடவடிக்கை, அவரது திருமணம், பிறருக்கு அவர் திருமணம் செய்து வைத்தல், விற்றல் – வாங்கல், பாங்கு சொல்வது முதலானவற்றில் அவரை ஏற்றல் ஆகியன பற்றியும், குரல்களைக் கொண்டு மட்டுமே அறியப்பட்டதை சாட்சியாக ஏற்பது பற்றியும்.

காசிம் (ரஹ்), ஹஸன் பஸரீ (ரஹ்), இப்னு சீரின் (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்), அதாஉ (ரஹ்) ஆகியோர், குருடரின் சாட்சியம் செல்லும் என்று கூறுகிறார்கள்.

குருடர் புத்திக் கூர்மையுடையவராக இருந்தால் அவரது சாட்சியம் செல்லும் என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

எத்தனையோ விஷயங்களில் (குருடருக்கு) சலுகை அளிக்கப்படும் என்று ஹகம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? அவர்கள் (கண் பார்வையற்ற முதியவராக இருக்கும் போது) ஒரு சாட்சியம் அளித்தால் அதை நீங்கள் ஏற்க மறுப்பீர்களா? என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓர் ஆளை அனுப்பி (செய்தியறிந்து) சூரியன் மறைந்து விட்டிருந்தால் நோன்பை நிறைவு செய்து கொள்வார்கள்; அதிகாலை நேரம் பற்றிக் கேட்பார்கள்; அது உதயமாகி விட்டது என்று கூறப்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்வார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (மைமூனா (ரலி) அவர்களின் வீட்டுக்குள் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் என் குரலைப் புரிந்து கொண்டு, சுலைமானே! உள்ளே செல். ஏனெனில், நீ கடன் ஏதும் பாக்கி வைக்காத (முகாத்தபான) அடிமையாவாய் என்று கூறினார்கள் என சுலைமான் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். முகத்திரை அணிந்த பெண்ணின் சாட்சியம் செல்லும் என்று சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் வரிகள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன:

நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்க, அவரின் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவிமடுத்து (என்னிடம்), ‘ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?’ என்று கேட்டார்கள். ‘ஆம் (இது அப்பாதின் குரல் தான்)’ என்று நான் பதிலளித்ததும் நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்’ என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 52

(புகாரி: 2655)

بَابُ شَهَادَةِ الأَعْمَى وَأَمْرِهِ وَنِكَاحِهِ وَإِنْكَاحِهِ وَمُبَايَعَتِهِ وَقَبُولِهِ فِي التَّأْذِينِ وَغَيْرِهِ، وَمَا يُعْرَفُ بِالأَصْوَاتِ

وَأَجَازَ شَهَادَتَهُ قَاسِمٌ، وَالحَسَنُ، وَابْنُ سِيرِينَ، وَالزُّهْرِيُّ، وَعَطَاءٌ وَقَالَ الشَّعْبِيُّ: «تَجُوزُ شَهَادَتُهُ إِذَا كَانَ عَاقِلًا» وَقَالَ الحَكَمُ: «رُبَّ شَيْءٍ تَجُوزُ فِيهِ» وَقَالَ الزُّهْرِيُّ: «أَرَأَيْتَ ابْنَ عَبَّاسٍ لَوْ شَهِدَ عَلَى شَهَادَةٍ أَكُنْتَ تَرُدُّهُ؟» وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَبْعَثُ رَجُلًا إِذَا غَابَتِ الشَّمْسُ أَفْطَرَ، وَيَسْأَلُ عَنِ الفَجْرِ، فَإِذَا قِيلَ لَهُ طَلَعَ صَلَّى رَكْعَتَيْنِ وَقَالَ سُلَيْمَانُ بْنُ يَسَارٍ: اسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ، فَعَرَفَتْ صَوْتِي، قَالَتْ: «سُلَيْمَانُ ادْخُلْ، فَإِنَّكَ مَمْلُوكٌ مَا بَقِيَ عَلَيْكَ شَيْءٌ» وَأَجَازَ سَمُرَةُ بْنُ جُنْدُبٍ شَهَادَةَ امْرَأَةٍ مُنْتَقِبَةٍ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقْرَأُ فِي المَسْجِدِ، فَقَالَ: «رَحِمَهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً، أَسْقَطْتُهُنَّ مِنْ سُورَةِ كَذَا وَكَذَا»

وَزَادَ عَبَّادُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ، تَهَجَّدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي، فَسَمِعَ صَوْتَ عَبَّادٍ يُصَلِّي فِي المَسْجِدِ، فَقَالَ: «يَا عَائِشَةُ أَصَوْتُ عَبَّادٍ هَذَا؟»، قُلْتُ: نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ ارْحَمْ عَبَّادًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.