பாடம் : 12 பெண்களின் சாட்சியம் (செல்லும்)
அல்லாஹ் கூறுகிறான்: (சாட்சி சொல்வதற்கு) இரண்டு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (2 : 282)
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
‘பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?’ என்று நபி(ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், ‘ஆம் (பாதியளவு தான்)’ என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதுதான் அவளுடைய அறிவின் குறைபாடாகும்’ என்று கூறினார்கள்.
Book : 52
بَابُ شَهَادَةِ النِّسَاءِ
وَقَوْلِهِ تَعَالَى: {فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ} [البقرة: 282]
حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي زَيْدٌ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«أَلَيْسَ شَهَادَةُ المَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ؟»، قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَلِكَ مِنْ نُقْصَانِ عَقْلِهَا»
சமீப விமர்சனங்கள்