பாடம் : 20 பொருளாதார மற்றும் குற்றவியல் (சிவில்-கிரிமினல்) விவகாரங்களில், (தான் நிரபராதி என்று) சத்தியம் செய்வது பிரதிவாதியின் மீதே கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள், (வாதியான) உனது இரு சாட்சிகள்; அல்லது (பிரதி வாதியான) அவரது சத்தியம் (ஆகியன இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன) என்று சொன்னார்கள்.
மேலும், இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரேயொருவரின் சாட்சியம் மற்றும் வாதியின் சத்தியம் குறித்து, அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கருத்துக் கேட்ட போது நான் இந்த இறை வசனத்தை எடுத்துரைத்தேன்.
அல்லாஹ் கூறுகிறான்: மேலும், உங்களில் இரு ஆண்களை சாட்சிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவதற்காக. (2:282)
ஒரு சாட்சியுடன் வாதியின் சத்தியமும் இருந்தால் போதும் என்றிருக்குமாயின் ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவூட்டத் (துணையாக மற்றொரு சாட்சி) தேவையில்லையே. மற்றொருத்தி நினைவூட்டுவதால் என்ன பயன்? என்று (புகாரீயாகிய) நான் கேட்கிறேன்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சொல்லி சத்தியம் செய்கிறவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை மறுமையில் சந்திப்பார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:
அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) (வந்து), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இப்படி (நபி(ஸல்) அவர்கள் சொன்னது) நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (பற்றிய தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உனக்கு ஆதாரம் ஏதும் உண்டா?’ என்று என்னைக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். எனவே, அந்த யூதரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘(நிலம் உன்னுடையது என்று) சத்தியம் செய்’ என்று கூறினார்கள்.
நான், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படியென்றால், அவன் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்து என் செல்வத்தை எடுத்தச் சென்று விடுவானே’ என்று கூறினேன்.
அப்போதுதான், ‘அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது’ என்னும் திருக்குர்ஆனின் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
Book : 52
بَابٌ: اليَمِينُ عَلَى المُدَّعَى عَلَيْهِ فِي الأَمْوَالِ وَالحُدُودِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: كَتَبَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِاليَمِينِ عَلَى المُدَّعَى عَلَيْهِ»
சமீப விமர்சனங்கள்