தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-93

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 தலைவர் அல்லது நபிமொழித்துறை அறிஞர் அருகில் மண்டியிட்டு அமர்தல். 

 ‘நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா ‘யார் என் தந்தை?’ எனக் கேட்டார். அதற்கு ‘உன்னுடைய தந்தை ஹுதாஃபா’ என்று கூறிவிட்டு ‘என்னிடம் கேளுங்கள்!’ என்று அதிகமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். உடனே உமர்(ரலி) முழந்தாளிட்டு அமர்ந்து ‘நாங்கள் அல்லாஹ்வை எங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அதிபதி என்றும், இஸ்லாத்தை (சரியான) மார்க்கமென்றும், முஹம்மத்(ஸல்) அவர்களை இறைத்தூதர் என்றும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம்’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அமைதியாகிவிட்டார்கள்’ அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 3

(புகாரி: 93)

بَابُ مَنْ بَرَكَ عَلَى رُكْبَتَيْهِ عِنْدَ الإِمَامِ أَوِ المُحَدِّثِ

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ فَقَالَ: مَنْ أَبِي؟ فَقَالَ: «أَبُوكَ حُذَافَةُ» ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ: «سَلُونِي» فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ: رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا فَسَكَتَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.