தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1985

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

(ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்வது பெண்கள் மீது இல்லை. (சிறிதளவு முடியைக்) குறைத்துக் கொள்வதே அவர்கள் மீது உள்ளது” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 1985)

حَدَّثَنَا أَبُو يَعْقُوبَ الْبَغْدَادِيُّ، ثِقَةٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، قَالَتْ: أَخْبَرَتْنِي أُمُّ عُثْمَانَ بِنْتُ أَبِي سُفْيَانَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَيْسَ عَلَى النِّسَاءِ الْحَلْقُ، إِنَّمَا عَلَى النِّسَاءِ التَّقْصِيرُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1694.
Abu-Dawood-Shamila-1985.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1696.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்பவர் என்றாலும் தாரிமீ, தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அறவிப்புகளில் அப்துல் ஹமீதிடம் நேரடியாக கேட்டதாக அறவித்துள்ளார் என்பதால் இது சரியான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: தாரிமீ-1946 , அபூதாவூத்-1984 , 1985 , அல்முஃஜமுல் கபீர்-13018 , தாரகுத்னீ-2666 , 2667 , குப்ரா பைஹகீ-9404 , 9405 , 9406 ,

(ஹஜ்ஜில்) பெண்களுக்கு தலைமுடியை மழித்தல் இல்லை என்ற சொல் அவர்கள் மீது அவசியம் இல்லை என்ற கருத்தைத் தான் தரும். அவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கருத்தைத் தராது.

ஹஜ் முடித்த பின் அவர்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்பதை நபி ஸல் அவர்கள் மார்க்கக் கட்டளையாகப் பிறப்பித்தால் அது பெண்களில் அதிகமானவர்களுக்கு விரும்பத்தக்கதாக இருக்காது. எனவே தான் அவர்கள் மீது மழித்தல் அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.

அவர்கள் விரும்பி தலையை மழித்துக் கொள்வது குற்றமாக ஆகாது. இதனால் தான் நபி ஸல் அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் ஹஜ் முடித்து தமது தலையை மழித்துள்ளனர். (பார்க்க : இப்னு ஹிப்பான்-4134 )

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.