தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-229

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நானும் இன்னும் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். (அவ்விருவரில்) ஒருவர் எங்களைச் சார்ந்தவர். இன்னொருவர் பனூ அசத் கிளையைச் சார்ந்தவர் என்று கருதுகிறேன். அவ்விருவரையும் அலீ (ரலி) அவர்கள் ஒரு (முக்கிய) பணி நிமித்தமாக அனுப்பினார்கள். அப்போது (அவ்விருவரையும் நோக்கி) நீங்கள் இருவரும் செயலாற்றுவதில் திறம் படைத்தவர்கள். உங்கள் மார்க்கப் பணியை திறம்படச் செய்யுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார்கள்.

பிறகு கழிப்பிடம் சென்று வெளியே வந்து தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் ஒரு கையளவு நீரள்ளி அதை (கைகளில் அல்லது வேறு உறுப்பில்) தடவிக் கொண்டார்கள். பிறகு குர்ஆன் ஓதத் துவங்கினார்கள். இதை அவர்கள் (தோழர்கள்) ஆட்சேபித்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவந்து எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தருவார்கள். எங்களுடன் இறைச்சியைச் சாப்பிடுவார்கள். கடமையான குளிப்பைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதை விட்டும் அவர்களைத் தடுக்காது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சலமா

(அபூதாவூத்: 229)

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، قَالَ:

دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَا وَرَجُلَانِ، رَجُلٌ مِنَّا وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ أَحْسَبُ، فَبَعَثَهُمَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهًا، وَقَالَ: إِنَّكُمَا عِلْجَانِ، فَعَالِجَا عَنْ دِينِكُمَا، ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَخْرَجَ ثُمَّ خَرَجَ، فَدَعَا بِمَاءٍ فَأَخَذَ مِنْهُ حَفْنَةً فَتَمَسَّحَ بِهَا، ثُمَّ جَعَلَ يَقْرَأُ الْقُرْآنَ، فَأَنْكَرُوا ذَلِكَ، فَقَالَ: ” إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَخْرُجُ مِنَ الخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ، وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ وَلَمْ يَكُنْ يَحْجُبُهُ – أَوْ قَالَ: يَحْجِزُهُ – عَنِ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-198.
Abu-Dawood-Shamila-229.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-198.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24637-அப்துல்லாஹ் பின் ஸலிமா நல்லவர் என்றாலும் அவருடைய மனன சக்தியில் கோளறு உள்ளது. இவருடைய மோசமான மனனத் தன்மையின் காரணத்தால் பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

  • இவரிடத்தில் பலவீனம் இருப்பதாக இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    கூறியுள்ளார்.
  • இவர் சரியான செய்திகளையும் பிழையான செய்திகளையும் அறிவிப்பவர் என இமாம் அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்.
  • இவர் தவறிழைப்பவர் என இமாம் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    கூறியுள்ளார்.
  • இவர் அறிவிக்கும் செய்திகள் சரியானவை அல்ல என இமாம் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    கூறியுள்ளார்.
  • இவரது மனன சக்தியில் பாதிப்பு ஏற்பட்டு மாறிவிட்டது என இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.
  • ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என இமாம் ஷாஃபி பிறப்பு ஹிஜ்ரி 150
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 54
    கூறியுள்ளார்.
  • இவருக்கு வயது முதிர்ந்தவுடன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேற்கண்ட செய்தியை இவர் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலே அறிவித்ததாகவும் ஷுஃபா கூறியதாக இமாம் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    தெரிவிக்கின்றார்.
  • அப்துல்லாஹ் பின் ஸலிமா பலவீனமானவர் என்பதால் இவர் இடம்பெறும் மேற்கண்ட ஹதீஸை இமாம் அஹ்மது பின் ஹம்பள் பலவீனமானது என்று கூறியுள்ளார்.

என்றாலும் யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
போன்றோர் பலமானவர் எனக் கூறியுள்ளனர். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
சுமாரானவர் எனக் கூறியுள்ளார். எனவே இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஷுஐப் போன்றோர் இந்த செய்தியை ஹஸன் தரத்தில் உள்ள செய்தி எனக் கூறியுள்ளனர்.

இவர் பலமானவர் என்று சொல்பவர்களை விட பலவீனமானவர் என்று கூறுபவர்களின் சான்று பலமாக இருப்பதால் இவர் பலவீனமானவர் என்பதே சரியானது.

இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-627 , 639 , 686 , 840 , 872 , 1011 , 1123 , இப்னு மாஜா-594 , அபூதாவூத்-229 , திர்மிதீ-146 , நஸாயீ-265 , 266 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.