தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2735

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 முகாத்தப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) மற்றும் அல்லாஹ்வின் சட்டத்திற்கு முரணான, அனுமதிக்கப்படாத நிபந்தனைகள்.

ஜாபிர் (ரலி) அவர்கள், முகாத்தபின் விஷயத்தில் அவர்களுடைய (முகாத்தப் மற்றும் அவனது எஜமானர்களின்) நிபந்தனைகள் அவர்களுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்டபடியே இருக்கும் என்று கூறினார்கள்.

இறைச் சட்டத்திற்கு மாற்றமான நிபந்தனைகள் அனைத்தும் செல்லாத வையாகும்; நூறுமுறை நிபந்தனைகள் விதித்தாலும் சரியே என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்லது உமர் (ரலி) அவர்கள் (இருவரில் எவரோ ஒருவர்) கூறினார்கள்.

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பரீரா, தன்னுடைய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்த (உதவி தேடி) என்னிடம் வந்தார். நான், ‘நீ விரும்பினால் உன் எஜமானர்களுக்கு (முழுத் தொகையையும்) நான் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே உரியதாகி விட வேண்டும்’ என்று கூறினேன்.

இறைத்தூதர் வந்தபோது நான் இதை அவர்களிடம் கூறினேன். அவர்கள், ‘அவரை வாங்கி விடுதலை செய்து விடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது’ என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை மேடையின் மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்;) ‘மக்கள் சிலருக்கு என்ன நேர்ந்துவிட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே’ என்று கூறினார்கள்.
Book : 54

(புகாரி: 2735)

بَابُ المُكَاتَبِ وَمَا لاَ يَحِلُّ مِنَ الشُّرُوطِ الَّتِي تُخَالِفُ كِتَابَ اللَّهِ

وَقَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي المُكَاتَبِ: «شُرُوطُهُمْ بَيْنَهُمْ» وَقَالَ ابْنُ عُمَرَ، أَوْ عُمَرُ: «كُلُّ شَرْطٍ خَالَفَ كِتَابَ اللَّهِ فَهُوَ بَاطِلٌ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَيُقَالُ عَنْ كِلَيْهِمَا عَنْ عُمَرَ وَابْنِ عُمَرَ»

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ

أَتَتْهَا بَرِيرَةُ تَسْأَلُهَا فِي كِتَابَتِهَا فَقَالَتْ: إِنْ شِئْتِ أَعْطَيْتُ أَهْلَكِ وَيَكُونُ الوَلاَءُ لِي، فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَّرْتُهُ ذَلِكَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْتَاعِيهَا، فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى المِنْبَرِ، فَقَالَ: «مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.