தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2001

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள், தவாஃபுல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் (தோள்களைக் குலுக்கி நடையோட்டமாக) ஓடவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 2001)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمْ يَرْمُلْ فِي السَّبْعِ الَّذِي أَفَاضَ فِيهِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1710.
Abu-Dawood-Shamila-2001.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1712.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் அவர்கள், நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

என்றாலும் இவர் அதாஉ பின் அபூரபாஹ்விடமிருந்து அறிவிக்கும் செய்தியில் தத்லீஸ் செய்யமாட்டார். காரணம்:

1 . இவர் அதாவிடம் 18 அல்லது 19 வருடங்களாக ஹதீஸைக் கேட்கும் தொடர்பில் இருந்துள்ளார்.

2 . அதாவின் மாணவர்களில் இவரே மிகவும் ஏற்கத்தக்கவர் என இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
போன்றோர் கூறியுள்ளனர்.

3 . உங்களுக்கு பின் உங்கள் சபையில் ஹதீஸை அறிவிக்க யாரை விட்டுச் செல்வீர்கள்? என்று அதா அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர் இப்னு ஜுரைஜை சுட்டிக்காட்டினார்.

4 . இப்னு ஜுரைஜ் அவர்களே, நான் ஸமிஃது அதாஃ-அதாவிடம் செவியேற்றேன் என்று கூறாமல் கால அதாஃ-அதாஃ கூறினார் என்று கூறினாலும் அது நான் அதாவிடம் நேரடியாக கேட்டவை தான் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/356, 357, தாரீகு பக்தாத்-10/402, ஸியரு அஃலாமின் நுபலாஃ-6/328, தஹ்தீபுத் தஹ்தீப்-3/503)

எனவே மேற்கண்ட செய்தி (இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்துள்ளார் என்ற காரணத்தால்) பலவீனமானது என்று முடிவு செய்யக்கூடாது.

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3060 , அபூதாவூத்-2001 , குப்ரா நஸாயீ-4156 , இப்னு குஸைமா-2943 , ஹாகிம்-1746 , குப்ரா பைஹகீ-9284 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.