தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2744

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

(இறுதி ஹஜ்ஜின்போது மக்காவில்) நான் நோயுற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் கால்சுவடுகளின் வழியே என்னைத் திருப்பியனுப்பி விடாமல் (பழைய மார்க்கத்திற்கே திரும்பிச் செல்லும்படி செய்து விடாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்’ என்று கூறினார்கள். ‘நான் மரண சாசனம் செய்ய விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள் தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) மரண சாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பாதி அதிகம் தான்’ என்று கூறினார்கள். நான் ‘அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்– அல்லது பெரியது தான்’ என்று கூறினார்கள்.
எனவே, மக்கள் மூன்றிலொரு பங்கை மரண சாசனம் செய்தார்கள். அது செல்லும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
Book :55

(புகாரி: 2744)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا مَرْوَانُ، عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

مَرِضْتُ، فَعَادَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ لاَ يَرُدَّنِي عَلَى عَقِبِي، قَالَ: «لَعَلَّ اللَّهَ يَرْفَعُكَ وَيَنْفَعُ بِكَ نَاسًا»، قُلْتُ: أُرِيدُ أَنْ أُوصِيَ، وَإِنَّمَا لِي ابْنَةٌ، قُلْتُ: أُوصِي بِالنِّصْفِ؟ قَالَ: «النِّصْفُ كَثِيرٌ»، قُلْتُ: فَالثُّلُثِ؟ قَالَ: «الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ»، قَالَ: فَأَوْصَى النَّاسُ بِالثُّلُثِ، وَجَازَ ذَلِكَ لَهُمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.