தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2763

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 அல்லாஹ் கூறுகிறான்:

அநாதைகளுக்கு அவர்களுடைய பொருட்களை (சொத்துகளை) கொடுத்து விடுங்கள். நல்ல பொருளைக் கொடுத்து விட்டுத் தீய பொருளை (அதற்கு) மாற்றாக வாங்கிக் கொள்ளாதீர்கள். மேலும், அவர்களின் பொருட்களை உங்கள் பொருட்களோடு சேர்த்து உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும்பாவமாகும். அநாதை(ப் பெண்)களிடம் நீதியுடன் நடந்து கொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால், உங்கள் மனத்திற்குப் பிடித்த பெண்களை……….. மணமுடித்துக் கொள்ளுங்கள். (4:2,3)

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் மேற்கண்ட 4:2,3 வசனத்தைக் குறித்து கேட்டபோது, பின்வருமாறு பதிலளித்தார்கள்.

இந்த வசனத்தில் கூறப்படும் பெண், தன் காப்பாளரின் மடியில் வளரும் அநாதைப் பெண் ஆவாள். அந்தக் காப்பாளர் அவரின் அழகுக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு, அவளை அவளுக்கு ஈடான பெண்களின் மஹ்ருத் தொகையை விடக் குறைவாகக் கொடுத்து மணந்துகொள்ள விரும்புகிறார். இத்தகைய காப்பாளர்கள் அப்பெண்களுக்கு அவர்களின் மஹ்ரை முழுமையாகக் கொடுத்து நீதியுடன் நடந்தாலே தவிர அவர்களை மணம் புரிந்து கொள்ளக் கூடாது என்று தடை செய்யப்பட்டு, அவர்களைத் தவிரவுள்ள பிற பெண்களை மணம் புரிந்து கொள்ளும்படி கட்டளையிடப்பட்டார்கள்.

பிறகும் மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் இந்த விவகாரத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வரவே, அல்லாஹ், ‘பெண்களின் விவகாரத்தில் தீர்ப்பு வழங்குமாறு அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். (நபியே!) அவர்கள் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான் என்று நீங்கள் கூறுங்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 04:127) வசனத்தை அருளினான்.

அநாதைப் பெண் அழகும் செல்வமும் உடையவளாக இருந்தால் அவளுடைய காப்பாளர்கள் அவளை மணம் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவளையொத்த ஒரு பெண்ணுக்குத் தரப்படுவது போன்ற மஹ்ரை முழுமையாக அவர்களுக்குத் தருவதில்லை.

அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருந்து, அதனால் அவளை மணமுடிக்க விருப்பமில்லாவிட்டால் அவளைவிட்டுவிட்டு வேறு பெண்களை (மணமுடிக்க) நாடிச் செல்கிறார்கள். எனவே ‘அவளை விரும்பாதபோது அவளை அவர்கள் விட்டு விடுவதைப் போன்றே, அவளை விரும்பும்போது அவளை மணமுடிக்கவும் அவர்களுக்கும் உரிமை இல்லை. அவளுக்கு உரிய மஹ்ரை நிறைவாக அவளுக்குத் தந்து, நீதியுடன் நடந்து, அவளுடைய உரிமையை அவளுக்குக் கொடுத்தாலே தவிர அவளை அவர்கள் மணமுடிக்கக் கூடாது’ என்று இந்த (திருக்குர்ஆன் 04:127) வசனத்தில் அல்லாஹ் விளக்கிக் கூறினான்.
Book : 55

(புகாரி: 2763)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَآتُوا اليَتَامَى أَمْوَالَهُمْ، وَلاَ تَتَبَدَّلُوا الخَبِيثَ بِالطَّيِّبِ، وَلاَ تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَى أَمْوَالِكُمْ إِنَّهُ كَانَ حُوبًا كَبِيرًا، وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي اليَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ} [النساء: 3]

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: كَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، يُحَدِّثُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

{وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي اليَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ} [النساء: 3]، قَالَتْ: هِيَ اليَتِيمَةُ فِي حَجْرِ وَلِيِّهَا، فَيَرْغَبُ فِي جَمَالِهَا وَمَالِهَا، وَيُرِيدُ أَنْ يَتَزَوَّجَهَا بِأَدْنَى مِنْ سُنَّةِ نِسَائِهَا، فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ، إِلَّا أَنْ يُقْسِطُوا لَهُنَّ فِي إِكْمَالِ الصَّدَاقِ، وَأُمِرُوا بِنِكَاحِ مَنْ سِوَاهُنَّ مِنَ النِّسَاءِ، قَالَتْ عَائِشَةُ: ثُمَّ اسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ} [النساء: 127]، قَالَتْ: ” فَبَيَّنَ اللَّهُ فِي هَذِهِ الآيَةِ: أَنَّ اليَتِيمَةَ إِذَا كَانَتْ ذَاتَ جَمَالٍ، وَمَالٍ رَغِبُوا فِي نِكَاحِهَا، وَلَمْ يُلْحِقُوهَا بِسُنَّتِهَا بِإِكْمَالِ الصَّدَاقِ، فَإِذَا كَانَتْ مَرْغُوبَةً عَنْهَا فِي قِلَّةِ المَالِ وَالجَمَالِ تَرَكُوهَا وَالتَمَسُوا غَيْرَهَا مِنَ النِّسَاءِ “، قَالَ: فَكَمَا يَتْرُكُونَهَا حِينَ يَرْغَبُونَ عَنْهَا، فَلَيْسَ لَهُمْ أَنْ يَنْكِحُوهَا إِذَا رَغِبُوا فِيهَا، إِلَّا أَنْ يُقْسِطُوا لَهَا الأَوْفَى مِنَ الصَّدَاقِ وَيُعْطُوهَا حَقَّهَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.