பாடம் : 28 வக்ஃபு (அறக் கட்டளை ஆவணம்) எப்படி எழுதப்பட வேண்டும்?
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ஒரு சொத்தைப் பெற்றுள்ளேன். அதை விட உயர்தரமான ஒரு சொத்தை இதுவரை நான் பெற்றதில்லை. நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை நீங்களே வைத்துக் கொண்டு அதன் வருவாயை தர்மம் செய்து விடலாம்’ என்று கூறினார்கள்.
எனவே, உமர்(ரலி), ‘அதன் அடிமனை விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாகவும் எவருக்கும் தரப்படக் கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் முடியாது’ என்று நிபந்தனைகளிட்டு, ஏழைகளுக்காகவும் உறவினர்களுக்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காவும், இறைவழியில் (அறப்போருக்குச்) செலவிடுவதற்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள்.
அதற்கு நிர்வாகப் பொறுப்பேற்கும் காப்பாளர் அதிலிருந்து நியாயமான முறையில் உண்பதிலும் விரயம் செய்யாமல் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதிலும் தவறில்லை என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
Book : 55
بَابُ الوَقْفِ كَيْفَ يُكْتَبُ؟
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
أَصَابَ عُمَرُ بِخَيْبَرَ أَرْضًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَصَبْتُ أَرْضًا لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَنْفَسَ مِنْهُ، فَكَيْفَ تَأْمُرُنِي بِهِ؟ قَالَ: «إِنْ شِئْتَ حَبَّسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا»، فَتَصَدَّقَ عُمَرُ أَنَّهُ لاَ يُبَاعُ أَصْلُهَا وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ فِي الفُقَرَاءِ، وَالقُرْبَى وَالرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ، لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ
சமீப விமர்சனங்கள்