தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2788

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 3

அறப்போர் புரியவும், அதில் உயிர்த் தியாகம் செய்யவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்வாய்ப்பு வேண்டிப் பிரார்த்தித்தல்.

உமர் (ரலி) அவர்கள், இறைவா! உன் தூதருடைய ஊரில் உயிர்த் தியாகம் செய்யும் வாய்ப்பை எனக்கு அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள்.

(புகாரி: 2788)

بَابُ الدُّعَاءِ بِالْجِهَادِ وَالشَّهَادَةِ لِلرِّجَالِ وَالنِّسَاءِ

وَقَالَ عُمَرُ: «اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي بَلَدِ رَسُولِكَ»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ فَتُطْعِمُهُ – وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ – فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ،


Bukhari-Tamil-2788.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2788.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  1. இதன் அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையும் இல்லை.
  2. உம்மு ஹராம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி சிற்றன்னை ஆவார் என்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் அந்நியப்பெண் ஆவார்.
  3. இதனடிப்படையில் இந்த ஹதீஸின் கருத்து, குர்ஆனுக்கும், இஸ்லாமிய அடிப்படைகளுக்கும் முரணாக உள்ளது.

கூடுதல் விளக்கம் பார்க்க: உம்மு ஹராம் சம்பவம் , நபிகள் நாயகம் (ஸல்) அன்னியப் பெண்ணுடன் பழகினார்களா? ,

  1. மாற்றுக்கருத்து உடையவர்கள் விளக்கத்தை முழுமையாக படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை (1) கண்ணியமான முறையில், (2) ஆதாரத்துடன், (3) சுருக்கமாக பதிவு செய்யவும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-1336 , அஹ்மத்-13791 , 27032 , 27033 , 27377 , 27378 , தாரிமீ-2465 , புகாரி-2788 , 2799 , 2800 , 2877 , 2894 , 2895 , 2924 , 62816282 , 7001 , 7002 , அல்அதபுல் முஃப்ரத்-952 , முஸ்லிம்-38733874 , 3875 , இப்னு மாஜா-2776 , அபூதாவூத்-2490 , 2491 , 2492 , 2493 , திர்மிதீ-1645 , நஸாயீ-3171 , 3172 , …

7 comments on Bukhari-2788

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே ,எனக்கு ஒரு சந்தேகம் அல்லாஹ்விற்காக நீங்கள் எனது சந்தேகத்தை தீர்த்துவைக்கவும்.

    உம்மு ஹராம் சம்பந்தாமாக கீழ்காணும் விளக்க உரையில் வேறு சில ஹதீஸ் அறிவிப்புகளில் அனஸ்(ரலி) அவர்கள் நபியவர்களுடன் அந்த வீட்டில் இருந்ததாகவும் பேன் பார்த்தது அனஸ்(ரலி) தான் என்று வருவதாக சொல்கிறார். அப்படி ஏதும் ஹதீஸில் வருகிறதா?தயவுசெய்து விளக்கவும்.

    https://www.youtube.com/watch?v=GdqIscn4gSc

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.

    சகோதரர் அவர்களே இதற்கான ஆதார நூல்களை பதிவு செய்யவும்.

  3. 1)நபியின் அந்த சந்திப்புக்கு பிறகே உம்மு ஹராம் திருமணம்:
    அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
    பிறகு உம்மு ஹராம் (ரலி) அவர்களை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் மணந்துகொண்டார்கள்.-புகாரீ 2894,முஸ்லிம் 3874

    2)மடியில் தலை வைக்கவில்லை ஆதாரம்:
    அருகில் தமது தலையைக் கீழே வைத்து உறங்கினார்கள்…-முஸ்லிம் 3875

    3)உம்மு ஹராம் திருமணத்திற்கு முன் உம்மு சுலைம் வீட்டில்

    அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (எங்கள் இல்லத்திற்கு) வந்தார்கள். அப்போது அங்கு நானும் என் தாயாரும் என் தாயின் சகோதரி உம்மு ஹராம் (ரலி) அவர்களுமே இருந்தோம்.-முஸ்லிம் 4888.

    5)ஒரு வேளை குபாவில் உம்மு ஹராம் இருந்தாலும் வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே குபா நபி அவர்கள் செல்வார்கள் அடிக்கடி செல்ல மாட்டார்கள்.

    “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘குபா’ பள்ளிவாசலுக்கு நடந்தும் ஊர்தியிலும் வருவார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.-புகாரீ 1193

    6)உம்மு ஹராம் வீட்டுக்கு அவரின் சகோதரி மகன் அனஸ்(ரலி) உடன் தான் நபி அவர்கள் செல்கிறார்கள். தனிமையில் செல்லவில்லை அனஸ்(ரலி) தான் இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.ஆக தனிமையிலும் சந்திக்கவில்லை.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. இந்த விசயத்தில் இருக்கும் இருவகையான கருத்துகளையும் ஆய்விற்கு எடுத்துக்கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.

  4. ஜஸாகல்லாஹு கைரா. ஆய்வுக்கு எடுத்துக் கொண்டமைக்கு நன்றி.

    7)பொதுவாக அனஸ் அவர்கள் வீட்டிலேயே இது போன்று நடந்துள்ளது அப்போது மூன்று பேரும் சேர்ந்து தான் இருந்துள்ளார்கள்.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) யிடம் வந்தபோது நெய், பேரீத்தம்பழம் ஆகியவற்றைக் கொடுத்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தை அதன் பாத்திரத்தில் வையுங்கள், தேனை அதன் பையிலேயே வையுங்கள். ஏனெனில் நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் என்று சொன்னார்கள். பிறகு எழுந்து எங்களுக்கு நபிலான தொழுகையின் இரு ரக்அத்களை தொழுவித்தார்கள். உம்மு ஸுலைம், உம்மு ஹராம் ஆகிய இருவரும் எழுந்து எங்கள் பின்னால் நின்று தொழுதார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
    – அபுதாவூத் 608.

    அடுத்து 8 முக்கிய குறிப்பாக பேன் பார்த்த செய்தியையும் குர்ஆனிற்கு முரண் இல்லாமல் வருகிறது என்பதை இன்ஷா அல்லாஹ் அதை அடுத்து பதிவு செய்கிறேன்.

  5. உங்களுடைய இந்த ஹதீஸ் திரட்டும் பணி மாபெரும் பணி இதில் நபி அவர்கள் முன்னறிவிப்பு செய்த இந்த உம்மு ஹராம் ஹதீஸ் முக்கியத்துவம் உணர்ந்து தயவுசெய்து இந்த ஹதீஸாஇ எனது கருத்துக்களுடன் மீளாய்வு செய்யவும்.

    1) பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் மருத்துவ அடிப்படையில் சிகிச்சையளிக்களாம் – புகாரீ 5679
    2) தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ.-குர்ஆன் 2:196.
    2a) இந்த வசனம் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் தலையில் பேன் இருந்தது தொடர்பாகவே இறங்கியது.-புகாரீ 1816
    2b) இந்த வசனத்தில் அல்லாஹ் தலையில் பேன் இருப்பதை நோய் என்றே குறிப்பிடுகிறான். புகாரீ இமாமும் மருத்துவம் தலைப்பில் இந்த ஹதீஸை பதிவுசெய்திருப்பார்கள்.அன்றைக்கும் இன்றைக்கும் இது பேன் ஒரு நோயாகவே பார்க்கப்படுகிறது.மருத்துவம் என்ற அடிப்படையில் தான் உம்மு ஹராம் நபி அவர்களுக்கு பேன் பார்த்தது.
    3) அன்றைக்கு சஹாபாக்களும் இப்படி செய்துள்ளார்கள்.- புகாரீ 1724
    4) சாலையில் களைப்புற்றுவிட்ட அந்நியப் பெண்ணை, ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்வது செல்லும்.-முஸ்லிம் 4397

    ஆகவே மருத்துவம் என்ற அடிப்படையில் இதில் தவறு இல்லை. மேன்கொண்டு இதில் உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கும் இன்ஷா அல்லாஹ் பதில் தெருகிறேன்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.