தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-6386

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உஹதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய முகத்தில் காயம் ஏற்பட்டபோது என் தந்தை மாலிக் பின் சினான் (ரலி)  அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி விழுங்கினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடைய இரத்தம் கலந்த மனிதரை நீங்கள் பார்ப்பது சந்தோசமளிக்குமென்றால் மாலிக் பின் சினான் அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் மாலிக் (ரலி)

(ஹாகிம்: 6386)

أَنْبَأَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَمْدَانَ الْجَلَّابُ بِهَمْدَانَ، ثَنَا أَبُو حَاتِمٍ الرَّازِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الطَّبَّاعِ، ثَنَا مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْحَجَبِيُّ، حَدَّثَتْنِي أُمِّي، مِنْ وَلَدِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أُمِّ عَبْدِ الرَّحْمَنِ بِنْتِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهَا أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

شُجَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَجْهِهِ يَوْمَ أُحُدٍ فَتَلَقَّاهُ أَبِي مَالِكُ بْنُ سِنَانٍ فَلَحَسَ الدَّمَ عَنْ وَجْهِهِ بِفَمِهِ، ثُمَّ ازْدَرَدَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى مَنْ خَالَطَ دَمِي فَلْيَنْظُرْ إِلَى مَالِكِ بْنِ سِنَانٍ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-6386.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-6413.




  • இந்த செய்தியின் முதல் அறிவிப்பாளர் தொடரில் வரும் أم سعيد بنت مسعود بن حمزة உம்மு ஸஈத், موسى بن محمد بن علي மூஸா பின் முஹம்மது போன்றோர் அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான செய்தி.

1 . இந்தக் கருத்தில் சஅத் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : ஹாகிம்-6386 , 6394 , அல்முஃஜமுல் கபீர்-5430 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9098 ,

2 . அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : தாரகுத்னீ-882 ,

3 . அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : ஹாகிம்-6343 ,

இதனுடன் தொடர்புள்ள செய்தி:

பார்க்க: குப்ரா பைஹகீ-13408 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.