தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-1651

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) கூறியதாவது:

லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு,  என் அருமை மகனே ! அறிஞர்களிடம் விவாதம் செய்வதற்காகவும், மடையர்களிடம் பெருமையடிப்பதற்காகவும், சபைகளில் உனதறிவை காட்டுவதற்காகவும் கல்வியைக் கற்றுக் கொள்ளாதே ! என்று உபதேசிப்பவர்களாக இருந்தார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.

மேலும் கூறியதாவது :

ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்:

வட்டியில் மிக மோசமான வட்டி, அநியாயமாக ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவதாகும்.

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்துவிடுவான்.

 

(முஸ்னது அஹ்மத்: 1651)

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ:

بَلَغَنِي أَنَّ: ” لُقْمَانَ كَانَ يَقُولُ: يَا بُنَيَّ، لَا تَعَلَّمِ الْعِلْمَ لِتُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ، أَوْ تُمَارِيَ بِهِ السُّفَهَاءَ، وَتُرَائِيَ بِهِ فِي الْمَجَالِسِ ” فَذَكَرَهُ

 وَقَالَ: حَدَّثَنَا نَوْفَلُ بْنُ مُسَاحِقٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«مِنْ أَرْبَى الرِّبَا الاسْتِطَالَةُ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ، وَإِنَّ هَذِهِ الرَّحِمَ شِجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَمَنْ قَطَعَهَا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1651.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




  • இந்த ஹதீஸில், லுக்மான் அவர்களின் உபதசேம் பற்றி வரும் முதல் பகுதி அறிவிப்பாளர்தொடர் முறிந்த செய்தி. இரண்டாவது பகுதி சரியான செய்தி.

மேலும் பார்க்க: அபூதாவூத்-4876 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.