தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2816

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 உயிர்த் தியாகிக்கு வானவர்கள் நிழல் தருவது.

 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

(உஹுதுப் போரின் போது) என் தந்தை, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். நான் என் தந்தையின் முகத்திலிருந்து (துணியை) விலக்கச் சென்றேன். என் குலத்தார் என்னைத் தடுத்தார்கள்.

அப்போது ஒப்பாரி வைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், அம்ர்(ரலி) அவர்களின் மகள் என்றோ – அவர்களின் சகோதரி என்றோ கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறாய்?’ நீ அழுதாலும் அழாவிட்டாலும் வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்’ என்று கூறினார்கள்.

(புகாரீயாகி) நான், அறிவிப்பாளர் ஸதகா இப்னு ஃபள்ல்(ரஹ்) அவர்களிடம், ‘அவர் உயர்த்தப்படும் வரை (நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்) என்று அறிவிப்பில் உள்ளதா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஜாபிர்(ரலி) அ(ந்த வாசகத்)தைக் கூறியிருக்கலாம் (என்று எனக்கு இதை அறிவித்த சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) உறுதியின்றிக் கூறினார்கள்)’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56

(புகாரி: 2816)

بَابُ ظِلِّ المَلاَئِكَةِ عَلَى الشَّهِيدِ

حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ المُنْكَدِرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ

جِيءَ بِأَبِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ مُثِّلَ بِهِ، وَوُضِعَ بَيْنَ يَدَيْهِ، فَذَهَبْتُ أَكْشِفُ عَنْ وَجْهِهِ، فَنَهَانِي قَوْمِي فَسَمِعَ صَوْتَ صَائِحَةٍ، فَقِيلَ: ابْنَةُ عَمْرٍو – أَوْ أُخْتُ عَمْرٍو – فَقَالَ: «لِمَ تَبْكِي – أَوْ لاَ تَبْكِي – مَا زَالَتِ المَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا»

قُلْتُ لِصَدَقَةَ: أَفِيهِ «حَتَّى رُفِعَ» قَالَ: رُبَّمَا قَالَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.