தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2831

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டோரில் தகுந்த காரணமின்றி (அறப்போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் உடைமைகளாலும், தம் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக ஆக முடியாது.

அறப்போரில் கலந்து கொள்ளாமல் தங்கி விட்டவர்களை விட அதில் கலந்து கொண்டு தம் உடைமைகளாலும், உயிர்களாலும் அறப்போர் புரிந்தவர்களை கண்ணியமான ஓர் அந்தஸ்தைக் கொண்டு அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (இவ்விரு பிரிவினரில்) ஒவ்வொரு வருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.

ஆயினும், அறப்போரில் கலந்து கொள்ளாமல் தங்கி விட்டவர்களை விட அறப்போரில் கலந்து கொண்டவர்களுக்கு மகத்தான நற்பலனை அதிகமாகத் தருகின்றான். அவர்களுக்கு அல்லாஹ்விடம் (சொர்க்கத்தின்) பல படித்தரங்கள் உண்டு; மன்னிப்பும், கருணையும் உண்டு. மேலும், அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும், இரக்கமுடையவனாகவும் இருக்கின்றான். (4:95,96)

 பராஉ(ரலி) அறிவித்தார்.

‘இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப்போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…’ என்னும் வசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார்.

(அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) தம் கண்பார்வையில்லாத நிலை குறித்து முறையிட்டார்கள். அப்போது, ‘…. தகுந்த காரணமின்றி ..’ என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (திருக்குர்ஆன் 04:95) அருளப்பட்டது.
Book : 56

(புகாரி: 2831)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {لاَ يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ، وَالمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ، فَضَّلَ اللَّهُ المُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ عَلَى القَاعِدِينَ دَرَجَةً، وَكُلًّا وَعَدَ اللَّهُ الحُسْنَى، وَفَضَّلَ اللَّهُ المُجَاهِدِينَ عَلَى القَاعِدِينَ} [النساء: 95] إِلَى قَوْلِهِ {غَفُورًا رَحِيمًا} [النساء: 23]

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ

لَمَّا نَزَلَتْ: {لاَ يَسْتَوِي القَاعِدُونَ} [النساء: 95] مِنَ المُؤْمِنِينَ ” دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا، فَجَاءَ بِكَتِفٍ فَكَتَبَهَا، وَشَكَا ابْنُ أُمِّ مَكْتُومٍ ضَرَارَتَهُ،

فَنَزَلَتْ: {لاَ يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ} [النساء: 95]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.