தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6112

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நீ ஹாஜியைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்புத் தேடுவதற்குக் கேட்டுக் கொள். ஏனெனில், அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6112)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْحَارِثِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْبَيْلَمَانِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ، وَصَافِحْهُ، وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ، فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-5838.
Musnad-Ahmad-Shamila-6112.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5945.




إسناد شديد الضعف فيه محمد بن الحارث الحارثي وهو متروك الحديث ، ومحمد بن عبد الرحمن النحوي وهو منكر الحديث (جوامع الكلم)

இந்தச் செய்தியில் முஹம்மது பின் ஹாரிஸ், முஹம்மது பின் அப்திர் ரஹ்மான், அப்துர் ரஹ்மான் பின் அபீ ஸைத் ஆகிய மூவர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.(பாகம் 6 பக்கம் 150)

இதில் முஹம்மத் பின் அப்துர்ஹ்மான் அல்பைலமானீ என்பவர் இடம்பெறுகிறார்.

இவர் நபிகளார் பெயரில் இட்டுக்கட்டி பொய்யான செய்திகளைச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர்.

மேலும் பார்க்க : அஹ்மத்-5371 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.