பாடம் : 58 மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய தூரம்.
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ‘ஹஃப்யா’விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘சனிய்யத்துல் வதா’வாக இருந்தது’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
நான் (அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம்,
‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிலிருந்தது?’ என்று கேட்டேன். அவர், ‘ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிலிருந்து’ என்று பதிலளித்தார்’ என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
தொடர்ந்து நாஃபிஉ(ரஹ்) கூறினார்.
‘நபி(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் பந்தயம் வைத்தார்கள். அவற்றை சனிய்யத்துல் வதாவிலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசலாக இருந்தது’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
மேலும், இப்னு உமர்(ரலி) அவர்களும் (தம் குதிரையுடன்) பந்தயத்தில் பங்கெடுத்தார்கள்.
‘நான் மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?’ என்று கேட்க, ‘சுமார் ஒரு மைல்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்’ என அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
Book : 56
بَابُ غَايَةِ السَّبْقِ لِلْخَيْلِ المُضَمَّرَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
سَابَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الخَيْلِ الَّتِي قَدْ أُضْمِرَتْ، فَأَرْسَلَهَا مِنَ الحَفْيَاءِ، وَكَانَ أَمَدُهَا ثَنِيَّةَ الوَدَاعِ – فَقُلْتُ لِمُوسَى: فَكَمْ كَانَ بَيْنَ ذَلِكَ؟ قَالَ: سِتَّةُ أَمْيَالٍ أَوْ سَبْعَةٌ – وَسَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، فَأَرْسَلَهَا مِنْ ثَنِيَّةِ الوَدَاعِ وَكَانَ أَمَدُهَا مَسْجِدَ بَنِي زُرَيْقٍ ” قُلْتُ: فَكَمْ بَيْنَ ذَلِكَ؟ قَالَ: مِيلٌ أَوْ نَحْوُهُ، وَكَانَ ابْنُ عُمَرَ مِمَّنْ سَابَقَ فِيهَا
சமீப விமர்சனங்கள்