தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-465

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

தொழுகையைப் பற்றி (மறுமையில்) விசாரணை.

ஹுரைஸ் பின் கபீஸா என்பவர் கூறியதாவது:

நான் மதீனாவிற்கு (பயணித்து) சென்றேன். அப்போது அல்லாஹ்வே! எனக்கு நல்ல சபைத்தோழர் கிடைப்பதை எளிதாக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்தேன். (பிறகு) நான் அபூஹுரைரா (ரலி) அவர்களின் சபைக்கு சென்று அமர்ந்து, (அபூஹுரைரா அவர்களே!) நான், எனக்கு நல்ல சபைத்தோழர் கிடைப்பதை எளிதாக்குவாயாக! என்று  அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வந்துள்ளேன். எனவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவியேற்ற ஒரு ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்; அதன் மூலம் அல்லாஹ் எனக்கு பயனளிப்பான் என்று கூறினேன்.

அப்போது அவர்கள், “(மறுமையில்) அடியான் முதன் முதலில் விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைப் பற்றித் தான். அது சரியாக இருந்தால் அவன் வெற்றி பெறுவான். அது சீர்கெட்டு இருந்தால் அவன் நட்டமடைந்துவிடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(நஸாயி: 465)

بَابُ الْمُحَاسَبَةِ عَلَى الصَّلَاةِ

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا هَارُونُ هُوَ ابْنُ إِسْمَاعِيلَ الْخَزَّازُ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ حُرَيْثِ بْنِ قَبِيصَةَ قَالَ:

قَدِمْتُ الْمَدِينَةَ قَالَ: قُلْتُ: اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا، فَجَلَسْتُ إِلَى أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: فَقُلْتُ إِنِّي دَعَوْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا، فَحَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَنِي بِهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ بِصَلَاتِهِ، فَإِنْ صَلَحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ»

قَالَ هَمَّامٌ: لَا أَدْرِي هَذَا مِنْ كَلَامِ قَتَادَةَ أَوْ مِنَ الرِّوَايَةِ: ” فَإِنِ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ: انْظُرُوا , هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ , فَيُكَمَّلُ بِهِ مَا نَقَصَ مِنَ الْفَرِيضَةِ، ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى نَحْوِ ذَلِكَ “.

خَالَفَهُ أَبُو الْعَوَّامِ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-461.
Nasaayi-Shamila-465.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-461.




إسناد ضعيف فيه قبيصة بن حريث الأنصاري وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34185-கபீஸா பின் ஹுரைஸ்-ஹுரைஸ் பின் கபீஸா பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவரைப் பற்றி விமர்சனம் உள்ளது என்றும், நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் இவரின் செய்திகள் சரியானவை அல்ல என்றும், இப்னுல் கத்தான், இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    போன்றோர் இவர் அறியப்படாதவர் என்றும், இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    அவர்கள், இவர் எறியப்படவேண்டிய பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னுஹிப்பான் அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்கள், இவரை தாபிஈ என்றும் பலமானவர் என்றும் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/425, தக்ரீபுத் தஹ்தீப்-5546)

  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள், பெரும்பாலும் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் விசயத்தில் தான்-فيه نظر- இவரைப் பற்றி விமர்சனம் உள்ளது என்று கூறுவார் என தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் ஹஸன் பஸரீ அவர்கள் வழியாக வரும் செய்திகளில் ஹஸன் —> அனஸ் பின் ஹகீம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானது என அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-426)

மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் இந்தக் கருத்தில் வரும் பல்வேறு வகையான அறிவிப்பாளர்தொடர்களைக் கூறியப்பின் ஹஸன் —> அனஸ் பின் ஹகீம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1551)

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்: 

1 . ஹஸன் பஸரீ —> கபீஸா பின் ஹுரைஸ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க: திர்மிதீ-413 , நஸாயீ-465 , குப்ரா நஸாயீ-322 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2553 ,

2 . ஹஸன் பஸரீ —> அபூராஃபிஃ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க: நஸாயீ-466 ,

3 . ஹஸன் பஸரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2590 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7770 , அஹ்மத்-16950 , முஸ்னத் அபீ யஃலா-6225 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7612 ,

4 . ஹஸன் பஸரீ —> பனூஸலீத் கூட்டத்தை சேர்ந்த ஒரு மனிதர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க: அபூதாவூத்- 865 , ஹாகிம்-968 , குப்ரா பைஹகீ-4001 ,

  • அனஸ் பின் ஹகீம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-35968 , அஹ்மத்-7902 , 9494 , இப்னு மாஜா-1425 , அபூதாவூத்-864 , முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-2199 , ஹாகிம்-965 , குப்ரா பைஹகீ-4000 ,

1 . ஹம்மாத் பின் ஸலமா —> அஸ்ரக் —> யஹ்யா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9566 , குப்ரா நஸாயீ-321 , நஸாயீ-467 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2554 ,

2 . ஹம்மாத் பின் ஸலமா —> அஸ்ரக் —> யஹ்யா —> ஒரு நபித்தோழர்

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-36008 , அஹ்மத்-16614 , 16949 , 20692 , 23203 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2552 ,

3 . ஹம்மாத் பின் ஸலமா —> அஸ்ரக் —> ஒரு நபித்தோழர்

பார்க்க: ஹாகிம்-967 ,

4 . ஹம்மாத் பின் ஸலமா —> ஹுமைத் —> ஹஸன் —> ஒரு மனிதர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க: அஹ்மத்-16954 , இப்னு மாஜா-1426 ,

5 . ஹம்மாத் பின் ஸலமா —> ஹுமைத் —> ஹஸன் —>  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க: அஹ்மத்-16950 ,

(6 . ஹம்மாத் பின் ஸலமா —> தாவூத் —> ஸுராரா —> தமீமுத்தாரீ-ரலி)

பார்க்க: அஹ்மத்-16951 , 16954 , தாரிமீ-1395 , இப்னு மாஜா-1426 , அபூதாவூத்-866 , ஹாகிம்-966967 ,

2 . தமீமுத்தாரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1426 .

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3976 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.