தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23046

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும்,

(கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது,

“கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 23046)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ» ، قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ» ،

قُلْتُ: سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ» ، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ» ،

قَالَ لَهُ: «بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-23434.
Musnad-Ahmad-Shamila-23046.
Musnad-Ahmad-Alamiah-21968.
Musnad-Ahmad-JawamiulKalim-22443.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


இந்த ஹதீஸில் கடனாளிக்கு தவணை முடிந்த பின் கூடுதல் அவகாசம் அளித்தால் இரு மடங்கு தர்மம் செய்த நன்மை என்றும், மற்ற ஹதீஸ்களில் ஒரு மடங்கு நன்மை என்றும் வந்துள்ளது…


இந்தக் கருத்தில் புரைதா பின் ஹுஸைப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்வாரிஸ் பின் ஸயீத் —> முஹம்மத் பின் ஜுஹாதா —> ஸுலைமான் பின் புரைதா —> புரைதா பின் ஹுஸைப் (ரலி)

பார்க்க: அஹ்மத்-23046 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, ஹாகிம்-2225 , குப்ரா பைஹகீ-10976 , ஷுஅபுல் ஈமான்-10748 , 10749 ,


  • அஃமஷ் —> நுஃபைஃ பின் ஹாரிஸ் –> புரைதா பின் ஹுஸைப் (ரலி)

பார்க்க: அஹ்மத்-22970 , இப்னு மாஜா-2418 ,


  • அப்துல்லாஹ் பின் உதாரித் —> முஹம்மத் பின் ஜுஹாதா —> அஃமஷ் —> நுஃபைஃ பின் ஹாரிஸ் –> புரைதா பின் ஹுஸைப் (ரலி)

பார்க்க: முஃஜமு அபீயஃலா-251.

معجم أبي يعلى الموصلي (ص: 209)
 251 – حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُطَارِدٍ الطَّائِيُّ، بَصْرِيٌّ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي دَاوُدَ، عَنْ بُرَيْدَةَ بْنِ الْحُصَيْبِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ» . ثُمَّ قَالَ بَعْدَ ذَلِكَ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُ الَّذِي أَنْظَرَهُ صَدَقَةً» . قَالَ بُرَيْدَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ مَرَّةً: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ» ، ثُمَّ قُلْتَ بَعْدَ ذَلِكَ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُ الَّذِي أَنْظَرَهُ» ؟ قَالَ: «إِنَّ قَوْلِي بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ الْأَجَلِ، وَبِكُلِّ يَوْمٍ مِثْلُ الَّذِي أَنْظَرَ بَعْدَ الْأَجَلِ»

251. “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்று ஒரு தடவை கூறினார்கள்.

பிறகு, மற்றொரு தடவை (கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் ஒரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு கூறினார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதரே! முதலில் அப்படி கூறினீர்கள். பிறகு இப்படி கூறினீர்களே ?என்று கேட்ட போது,

“கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் (கூடுதல்) தவணை தரும் நாள் வரை அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் ஒரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46688-நுஃபைஉ பின் ஹாரிஸ் என்ற அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    பற்றி,
  • இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கதாதா, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்ராஹீம் பின் யஃகூப் அல்ஜோஸ்ஜானீ ஆகியோர் கூறியுள்ளனர்.
  • அம்ர் பின் அலீ, அபூஸுர்ஆ, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    தாரமீ, இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகிய அறிஞர்கள் இவரை விடப்பட்டவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-10/471)


متروك
تقريب التهذيب: (1 / 1008)

மேலும் ராவீ-25062-அப்துல்லாஹ் பின் உதாரித் என்பவரும் மிக பலவீனமானவர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1008)


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.