தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-10749

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையை தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும்,

(கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் ஒரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது,

“கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்தபின்னும் (கூடுதல்) அவகாசம் அளித்தாலும் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் ஒருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

(shuabul-iman-10749: 10749)

وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عُقْبَةَ الشَّيْبَانِيُّ، ثَنُا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الزُّهْرِيُّ، ثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، ثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ “، قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ لَهُ: ” بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ “، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنِّي سَمِعْتُكَ تَقُولُ: ” فَلَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ “، وَقُلْتَ: الْآنَ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ فَقَالَ: ” إِنَّهُ مَا لَمْ يَحِلَّ الدَّيْنُ، فَلَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ، وَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظِرْهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-10749.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-10498.




இந்த ஹதீஸில் கடனாளிக்கு தவணை முடிந்த பின் கூடுதல் அவகாசம் அளித்தால் ஒரு மடங்கு தர்மம் செய்த நன்மை என்று இருந்தாலும் அஹ்மத்-23046 இல் வரும் செய்தியே சரியான செய்தி.

பார்க்க : முஸ்னத் அஹ்மத்-23046 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.