பாடம் : 102 இஸ்லாத்தையும் நபித்துவத்தையும் ஏற்கும்படியும், அல்லாஹ்வை விடுத்து சிலர், சிலரை தெய்வங்களாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் படியும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது.
அல்லாஹ் கூறுகிறான்:
ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும் தூதுத்துவத்தையும் ஞானத்தையும் அளித்திருக்க, அவற்றைப் பெற்ற பின்பு, நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னையே வணங்குவோராகி விடுங்கள் என்று மக்களிடம் கூற அவருக்கு அனுமதியில்லை. மாறாக, நீங்கள் வேதத்தை ஓதிக் கொண்டும் அதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்த காரணத்தால் இறைவனையே சார்ந்து வாழ்வோராக ஆகிவிடுங்கள் என்றே அவர் கூறுவார். (3:79)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரோம சக்கரவர்த்தி சீசருக்கு இஸ்லாத்திற்கு வரும்படி அழைப்புக் கொடுத்து கடிதம் எழுதினார்கள். திஹ்யா அல் கல்பீ என்னும் நபித் தோழரிடம் தம் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். ரோம சக்கரவர்த்தி சீசரிடம் கொடுப்பதற்காக புஸ்ராவின் அரசனிடம் அதைக் கொடுத்து விடும்படி அத் தோழருக்கு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
பாரசீகப் படைகளின் மீது அல்லாஹ் சீசருக்கு வெற்றியை அளித்தபோது, அவர் ‘ஹிம்ஸ்’ பகுதியிலிருந்து ஈலியாவை (புனித நகரமான ஜெரூசலத்தை) நோக்கி, அல்லாஹ் அளித்த வெற்றிப் பரிசுக்கான நன்றியைச் செலுத்தும் வகையில் சென்றார். சீசரிடம் அல்லாஹ்வின் தூதருடைய கடிதம் வந்த நேரத்தில் அவர் அதைப் படித்தபோது, ‘எனக்காக இங்கு இந்த மனிதரின் சமுதாயத்தைச் சேர்ந்த எவரையேனும் தேடிக் (கண்டு பிடித்துக்) கொண்டு வாருங்கள். அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அவர்களிடம் நான் கேட்பேன்’ என்று கூறினார்கள்.
Book : 56
بَابُ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَى الإِسْلاَمِ وَالنُّبُوَّةِ، وَأَنْ لاَ يَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ
وَقَوْلِهِ تَعَالَى: {مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللَّهُ الكِتَابَ} [آل عمران: 79] إِلَى آخِرِ الآيَةِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهُ أَخْبَرَهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَتَبَ إِلَى قَيْصَرَ يَدْعُوهُ إِلَى الإِسْلاَمِ، وَبَعَثَ بِكِتَابِهِ إِلَيْهِ مَعَ دِحْيَةَ الكَلْبِيِّ، وَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ بُصْرَى لِيَدْفَعَهُ إِلَى قَيْصَرَ، وَكَانَ قَيْصَرُ لَمَّا كَشَفَ اللَّهُ عَنْهُ جُنُودَ فَارِسَ، مَشَى مِنْ حِمْصَ إِلَى إِيلِيَاءَ شُكْرًا لِمَا أَبْلاَهُ اللَّهُ، فَلَمَّا جَاءَ قَيْصَرَ كِتَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ حِينَ قَرَأَهُ: التَمِسُوا لِي هَا هُنَا أَحَدًا مِنْ قَوْمِهِ، لِأَسْأَلَهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
சமீப விமர்சனங்கள்