தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2162

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 2162)

حَدَّثَنَا هَنَّادٌ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ الْحَارِثِ بْنِ مَخْلَدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَتَهُ فِي دُبُرِهَا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1847.
Abu-Dawood-Shamila-2162.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1850.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹம்மாத் பின் ஸலமா —> ஹகீம் அல்அஸ்ரம் —> அபூதமீமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-482 , அஹ்மத்-929010167 , தாரிமீ-1176 , இப்னு மாஜா-639 , அபூதாவூத்-3904 , திர்மிதீ-135 , …

  • ஸுஹைல் —> ஹாரிஸ் பின் முகல்லத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-7684 , 8532973310206 , தாரிமீ-1180 , இப்னு மாஜா-1923 , அபூதாவூத்-2162 ,

  • அவ்ஃப் —> கிலாஸ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-9536 ,

  • முஜாஹித் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க:

  • அப்துர்ரஹ்மான் பின் யஃகூப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6462 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4754 ,

இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல்  பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1165 ,

3 comments on Abu-Dawood-2162

  1. https://tamil.quranandhadis.com/musnad-ahmad-9536/

    பின் துவாரத்தில் உடல் உறவை பற்றி சொல்லக்கூடிய ஹதீஸ்களின் பட்டியலில் ஏன்❓ மேலுள்ள ஹதீஸை கொண்டு வருகிறீர்கள் ❓

    அல்முஃஜமுல் அவ்ஸத்-4754
    மேல் காணும் நம்பரில் உள்ள ஹதீஸ் திறக்கவில்லை ❓

    இப்னு அப்பாஸ் மூலமாகவும் அறிவிப்பு வந்துள்ளது.
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    அபூ ஹுரைராவின் ஒரு ஹதீஸ்:

    1.எவர் ஒரு பெண்ணின் பின் புறத்தில் (துப்ரில்) உறவு கொள்கிறாரோ, அல்லது ஒரு ஆண் அல்லது சிறுவனுடன் (ஒழுக்கக்கேடான உறவு) கொள்கிறாரோ, அவர் கியாமத்நாளில் (மறுமை நாளில்) அழுகிய சடலத்தை விட துர்நாற்றம் வீசும் நிலையில் உயிர்த்தெழுப்பப்படுவார். மக்கள் அவரது துர்நாற்றத்தால் துன்புறுவர், அவர் ஜஹன்னம் நரகத்தில் நுழையும் வரை! அல்லாஹ் அவரது (நன்) செயல்களின் நற்கூலியை அழித்துவிடுவான், அவரிடமிருந்து எந்த நஷ்ட ஈடு (ஸர்ஃப்) அல்லது பரிகாரம் (அத்ல்) ஏற்கப்படாது. அவர் நரகத்தின் ஒரு பெட்டியில் (தாபூத்) அடைக்கப்படுவார், இரும்பு ஆணிகளால் அவருக்கு வேதனை கொடுக்கப்படும்—அந்த ஆணிகள் அவரது உடலின் உள்ளே (குடலில்) பதியும்! அவரது ஒரு நரம்பிலிருந்து சிறிது நஞ்சை எடுத்து 400 சமுதாயத்தினர் மீது விட்டாலும், அவர்கள் அனைவரும் இறந்துவிடுவர்! அவர் மனிதர்களில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவார்.

    3.من أتَى النِّساءَ في أعجازِهنَّ فقد كفر

    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    2. உக்பத் இப்னு ஆமீர்:

    பெண்களின் (தவறான) உறவு இடங்களில் (மகாஷ்) செல்லும் எவரும் அழிக்கப்படுபவர், சபிக்கப்படுபவர்❗

    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    4. குஸைமா இப்னு சாபித்

    அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்பட மாட்டான்” (இதை மூன்று முறை சொன்னார்கள்). “பெண்களின் பின் புறத்தில் (அத்பார்) உறவு கொள்ளாதீர்கள்.

    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    5.இப்னு உமர்:

    ஒரு மனிதர் தன் மனைவியின் பின் புறத்தில் உறவு கொள்வது பற்றி கேட்கப்பட்டது.

    அது சிறிய அளவிலான லூத் (லிவாத்) செயலாகும்!

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்தச் செய்திகளை முதலில் பார்க்கவும்: முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-482, அஹ்மத்-9290,

      பல கருத்துள்ள செய்திகளை சிலர் ஒரே செய்தியாகவும், சிலர் பல செய்திகளாகவும் அறிவிப்பார்கள். ஹதீஸ் நூலாசிரியர்கள் கூட சில சமயம் விரிவான செய்தியை சுருக்கமாக அறிவிப்பார்கள்.

      இதனால் தக்ரீஜ் நூல்களில் சில நேரம் வெவ்வேறு கருத்துள்ள செய்திகளும் கலந்து இருக்கும்.

      நாம் பல அறிவிப்பாளர்தொடர்களை ஒன்று சேர்க்கும் போது இது போன்று பல கருத்துள்ள செய்திகளையும் ஒரே இடத்தில் பதிவு செய்வோம்.

      பிறகு வாய்ப்புக் கிடைக்கும் போது இன்ஷா அல்லாஹ் தனித்தனியாக தலைப்பிட்டு பதிவு செய்வோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.