பாடம்: 142
மக்காவின் சிறப்பு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)
குறிப்பு: ஹஸ்வரா என்ற வார்த்தைக்கு ஒட்டகம் என்ற பொருளும் உள்ளது. மக்காவின் கடைவீதியில் உள்ள ஒரு இடத்திற்கும் ஹஸ்வரா என்ற பெயர் உள்ளது.
(திர்மிதி: 3925)بَابٌ فِي فَضْلِ مَكَّةَ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ، قَالَ:
رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا عَلَى الحَزْوَرَةِ فَقَالَ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»
وَقَدْ رَوَاهُ يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، نَحْوَهُ
وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
«وَحَدِيثُ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ عِنْدِي أَصَحُّ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3860.
Tirmidhi-Shamila-3925.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3890.
- இதன் மூன்று அறிவிப்பாளர்தொடரில் முதல் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அதீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-3925 , அஹ்மத்-18715 , 18716 , தாரிமீ-2552 , இப்னு மாஜா-3108 , குப்ரா நஸாயீ-4238 , 4239 , இப்னு ஹிப்பான்-3708 , அல்முஃஜமுல் அவ்ஸத்-454 , ஹாகிம்-4270 , 5220 , 5827 ,
2 . அபூ ஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-18717 , 18718 , குப்ரா நஸாயீ- 4240 , ஹாகிம்-4261 , முஸ்னத் பஸ்ஸார்-7937 , ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-(3146)
3 . இப்னு அப்பஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-4690 , 5095 ,
4 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-13347 ,
5 . அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8868 ,
6 . சில ஆசிரியர்கள் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8869 ,
சமீப விமர்சனங்கள்