தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-5118

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள்.

அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை” என்று கூறினார்கள்.

அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் “அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை”என்று கூறினார்.

(bazzar-5118: 5118)

حَدَّثنا مُحَمد بن إسحاق البغدادي، قَال: حَدَّثنا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِي اللَّهُ عَنْهُمَا، قَالَ:

كَانَ جِبْرِيلُ جَالِسًا عِنْدَ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم فَسَمِعَ وَقْعًا، فَرَفَعَ رَأْسَهُ، فقال: هذا باب من السماء مَا فُتِحَ قَطُّ إِلا الْيَوْمَ فَنَزَلَ فِيهِ مَلَكٌ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ جِبْرِيلُ: هَذَا مَلَكٌ مَا نَزَلَ قَطُّ إِلَى الأَرْضِ إلاَّ الْيَوْمَ. فَقَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: أَبْشِرْ بِمَا لَمْ يُؤْتَهُ مَنْ كَانَ قَبْلَكَ خَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ أَحْسَبُهُ قَالَ: لَنْ يَقْرَأَ بِهَا أَحَدٌ فَيَسْأَلُ شَيْئًا إلاَّ أُعْطِيَهُ.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-5118.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-915.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1472 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.