நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு மனிதருக்கு திருமணம் நடத்திவைக்கும் போது அவரிடம், நான் இந்த பெண்ணை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அந்த பெண்ணிடமும் நான் இந்த மனிதரை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அந்த பெண்ணும் ஆம் என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஹர் எதையும் நிர்ணயிக்காமலேயே அவ்விருவருக்கும் திருமணம் முடித்துவைத்தார்கள். அந்த மனிதர் இல்லறவாழ்கையில் ஈடுபட்ட பின்பும் மஹர் தரவில்லை.
அவர் ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர். ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர்களுக்கு கைபர் போரில் பங்குண்டு என்ற வகையில் அவருக்கு ஒரு பங்கு கிடைத்தது.
அவரின் மரணத்தருவாயில், தன் அருகில் இருந்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் மஹர் எதுவும் நிர்ணயிக்காமலேயே எனக்கு இந்த பெண்ணை திருமணம் முடித்து வைத்தார்கள். நானும் இதுவரை மஹர் எதுவும் தரவில்லை. இப்போது கைபர் போரில் எனக்கு கிடைத்த பங்கை அந்தப்பெண்ணுக்கு மஹராக தருகிறேன், நீங்களே இதற்கு சாட்சி என்று கூறினார். அந்தபெண் கைபரின் பங்கை அவரிடம் மஹராக வாங்கி, அதை விற்று ஒரு லட்சம் திர்ஹத்தை பெற்றார்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:
எனது ஆசிரியர் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பு முழுமையானது. மேலும் அவர்கள் அறிவித்த நபிமொழியின் தொடக்கத்தில், “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எளிமையான திருமணமே சிறந்ததாகும் என்று அம்மனிதரிடம் கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:
இது (அதாவது கைபரில் கிடைத்த பங்கு என்பது) இந்த ஹதீஸில் சேர்த்ததாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. (ஏனெனில் அவர் மரண வேளையில் அதைவிட அதிகமாக மஹ்ர் வழங்கினார்.
(அபூதாவூத்: 2117)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ الذُّهْلِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ مُحَمَّدٌ: حَدَّثَنَا أَبُو الْأَصْبَغِ الْجَزَرِيُّ عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ خَالِدِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: «أَتَرْضَى أَنْ أُزَوِّجَكَ فُلَانَةَ؟»، قَالَ: نَعَمْ، وَقَالَ لِلْمَرْأَةِ: «أَتَرْضَيْنَ أَنْ أُزَوِّجَكِ فُلَانًا؟»، قَالَتْ: نَعَمْ، فَزَوَّجَ أَحَدَهُمَا صَاحِبَهُ فَدَخَلَ بِهَا الرَّجُلُ وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ يُعْطِهَا شَيْئًا وَكَانَ مِمَّنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ وَكَانَ مَنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ لَهُ سَهْمٌ بِخَيْبَرَ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوَّجَنِي فُلَانَةَ، وَلَمْ أَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ أُعْطِهَا شَيْئًا، وَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي أَعْطَيْتُهَا مِنْ صَدَاقِهَا سَهْمِي بِخَيْبَرَ، فَأَخَذَتْ سَهْمًا فَبَاعَتْهُ بِمِائَةِ أَلْفٍ.
قَالَ أَبُو دَاوُدَ: وَزَادَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَحَدِيثُهُ أَتَمُّ فِي أَوَّلِ الْحَدِيثِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ»، وَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلرَّجُلِ ثُمَّ سَاقَ مَعْنَاهُ. قَالَ أَبُو دَاوُدَ: يُخَافُ أَنْ يَكُونَ هَذَا الْحَدِيثُ مُلْزَقًا لِأَنَّ الْأَمْرَ عَلَى غَيْرِ هَذَا
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2117.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1811.
சகோ கீழ்காணும் தமிழாக்கம் விடுபட்டுள்ளது.
அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:
எனது ஆசிரியர் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பு முழுமையானது. மேலும் அவர்கள் அறிவித்த நபிமொழியின் தொடக்கத்தில், “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எளிமையான திருமணமே சிறந்ததாகும் என்று அம்மனிதரிடம் கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:
இது (அதாவது கைபரில் கிடைத்த பங்கு என்பது) இந்த ஹதீஸில் சேர்த்ததாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. (ஏனெனில் அவர் மரண வேளையில் அதைவிட அதிகமாக மஹ்ர் வழங்கினார்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. இதுபோன்று பெரும்பாலான ஹதீஸ்களில் நூலாசிரியர்கள் கூறும் தகவல் பதிவு செய்யவில்லை. அறிவிப்பாளர்தொடர்களிலும், ஹதீஸின் தரம் பற்றிய ஆய்வுகளிலும் கவனம் செலுத்துவதால் இதைப் பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம். இந்த செய்திக்கு நீங்கள் தந்துள்ள தமிழாக்கத்தை சேர்க்கிறோம்.