தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3041

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 166 எதிரியைக் கண்டவர், யா ஸபாஹா! (உதவி! உதவி! இதோ, அதிகாலை ஆபத்து!) என்று மக்களின் காதில் விழச் செய்யும் விதத்தில் உரக்கக் குர லெழுப்பி அழைப்பது.

 ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நான் மதீனாவிலிருந்து (ங)காபாவை நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன். நான் (ங)காபாவின் மலைப் பகுதியை அடைந்தபோது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் அடிமையொருவன் என்னைச் சந்தித்தான். நான், ‘அடப் பாவமே! உனக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டேன். அவன், ‘நபி(ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன’ என்று கூறினான்.

நான், ‘அவற்றை யார் எடுத்துச் சென்றது?’ என்று கேட்டேன். அதற்கவன், ‘கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார்’ என்று பதில் சொன்னான். உடனே நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையேயிருந்த அனைவருக்கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு ‘யா ஸபாஹா! (ஆபத்து!) யா ஸபாஹா! (ஆபத்து!)’ என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன்.

அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்து நின்டிருந்தனர். அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். ‘நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப் போகும்) நாள்’ என்று (பாடியபடி) கூறினேன். பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்து விட்டேன். பிறகு, திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர் கூட குடிக்க விடாமல் அவர்களை நான் (அம்பெய்து) அவசரமாக ஓட வைத்து விட்டேன். அவர்களைத் துரத்திச் சென்று பிடித்து வரப்படையனுப்புங்கள்’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அக்வஃ உடைய மகனே! நீ அவர்களைத் தோற்கடித்துவிட்டாய். எனவே, போனால் போகட்டும்,விட்டு விடு. அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்துவிட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறினார்கள்.
Book : 56

(புகாரி: 3041)

بَابُ مَنْ رَأَى العَدُوَّ فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ: يَا صَبَاحَاهْ، حَتَّى يُسْمِعَ النَّاسَ

حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، أَنَّهُ أَخْبَرَهُ قَالَ

خَرَجْتُ مِنَ المَدِينَةِ ذَاهِبًا نَحْوَ الغَابَةِ، حَتَّى إِذَا كُنْتُ بِثَنِيَّةِ الغَابَةِ، لَقِيَنِي غُلاَمٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قُلْتُ: وَيْحَكَ مَا بِكَ؟ قَالَ: أُخِذَتْ لِقَاحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: مَنْ أَخَذَهَا؟ قَالَ: غَطَفَانُ، وَفَزَارَةُ فَصَرَخْتُ ثَلاَثَ صَرَخَاتٍ أَسْمَعْتُ مَا بَيْنَ لاَبَتَيْهَا: يَا صَبَاحَاهْ يَا صَبَاحَاهْ، ثُمَّ انْدَفَعْتُ حَتَّى أَلْقَاهُمْ، وَقَدْ أَخَذُوهَا، فَجَعَلْتُ أَرْمِيهِمْ،

وَأَقُولُ:
أَنَا ابْنُ الأَكْوَعِ … وَاليَوْمُ يَوْمُ الرُّضَّعْ

فَاسْتَنْقَذْتُهَا مِنْهُمْ قَبْلَ أَنْ يَشْرَبُوا، فَأَقْبَلْتُ بِهَا أَسُوقُهَا، فَلَقِيَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ القَوْمَ عِطَاشٌ، وَإِنِّي أَعْجَلْتُهُمْ أَنْ يَشْرَبُوا سِقْيَهُمْ، فَابْعَثْ فِي إِثْرِهِمْ، فَقَالَ: ” يَا ابْنَ الأَكْوَعِ: مَلَكْتَ، فَأَسْجِحْ إِنَّ القَوْمَ يُقْرَوْنَ فِي قَوْمِهِمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.