தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2131

A- A+


ஹதீஸின் தரம்: More Info

மைமூனா பின்த் கர்தம் (ரலி) கூறியதாவது:

எனது தந்தை கர்தம் (ரலி), நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்கள். அச்சமயம் நான் என் தந்தையின் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தேன்.

எனது தந்தை நபி (ஸல்) அவர்களிடம், “நான் புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய (அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு) சிலை இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள் என்று கூறினார்கள்.

(இப்னுமாஜா: 2131)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيِّ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ كَرْدَمٍ الْيَسَارِيَّةِ،

أَنَّ أَبَاهَا لَقِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ رَدِيفَةٌ لَهُ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ بِبُوَانَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ بِهَا وَثَنٌ؟» قَالَ: لَا، قَالَ: «أَوْفِ بِنَذْرِكَ»

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ دُكَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ بْنِ مِقْسَمٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ كَرْدَمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2131.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2122.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين عبد الله بن عبد الرحمن الطائفي وميمونة بنت كردم الثقفية ، وباقي رجاله ثقات عدا عبد الله بن عبد الرحمن الطائفي وهو صدوق يخطئ ويهم

இதன் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான், மைமூனா பின்த் கர்தம் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது அறிவிப்பாளர்தொடர் முறிந்த செய்தி.

இதன் இரண்டாவது அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான், மைமூனா பின்த் கர்தம் (ரலி) இருவருக்குமிடையில் வரும் யஸீத் பின் மிக்ஸம் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர்.

சரியான ஹதீஸ் பார்க்க : அபூதாவூத்-3313 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.