மைமூனா பின்த் கர்தம் (ரலி) கூறியதாவது:
எனது தந்தை கர்தம் (ரலி), நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்கள். அச்சமயம் நான் என் தந்தையின் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தேன்.
எனது தந்தை நபி (ஸல்) அவர்களிடம், “நான் புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய (அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு) சிலை இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அதற்கு எனது தந்தை இல்லை என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ முடிவு செய்த இடத்தில் உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள் என்று கூறினார்கள்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12438)مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِي، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيِّ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ كَرَدْمِ الْيَسَارِيَّةِ،
أَنَّ أَبَاهَا لَقِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ رَدِيفَةٌ لَهُ، فَسَأَلَهُ فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ بِبُوَانَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ بِهَا وَثَنٌ؟» قَالَتْ: قَالَ أَبِي: لَا، قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَوْفِ بِنَذْرِكَ حَيْثُ قَدَّرْتَ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12438.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-13856.
إسناده حسن رجاله ثقات عدا عبد الله بن عبد الرحمن الطائفي وهو صدوق يخطئ ويهم
சரியான ஹதீஸ் பார்க்க : அபூதாவூத்-3313 .
சமீப விமர்சனங்கள்