தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3085

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உஸ்ஃபானிலிருந்து (போர் முடிந்து) திரும்பியபோது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒட்டகம் கால் சறுக்கி விட அவர்களிருவரும் ஒரு சேரக் கீழே விழுந்தார்கள்.

உடனே, அபூ தல்ஹா(ரலி) (தம் வாகனத்திலிருந்து) கீழே குதித்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக!’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனி’ என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா(ரலி) ஒரு துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா(ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் மீது அந்தத் துணியைப் போட்டார்கள்.

பிறகு இருவருக்கும் அவர்களின் வாகனத்தைச் சரிசெய்து கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரைச் சுற்றிலும் (வட்டமாக) நின்று அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியவுடன் நபி(ஸல்) அவர்கள், ‘பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனையே வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப் புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும் வரை அவர்கள் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
Book :56

(புகாரி: 3085)

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْفَلَهُ مِنْ عُسْفَانَ وَرَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ، وَقَدْ أَرْدَفَ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ، فَعَثَرَتْ نَاقَتُهُ، فَصُرِعَا جَمِيعًا، فَاقْتَحَمَ أَبُو طَلْحَةَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ، قَالَ: «عَلَيْكَ المَرْأَةَ»، فَقَلَبَ ثَوْبًا عَلَى وَجْهِهِ، وَأَتَاهَا، فَأَلْقَاهُ عَلَيْهَا، وَأَصْلَحَ لَهُمَا مَرْكَبَهُمَا، فَرَكِبَا وَاكْتَنَفْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَشْرَفْنَا عَلَى المَدِينَةِ قَالَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ» فَلَمْ يَزَلْ يَقُولُ ذَلِكَ حَتَّى دَخَلَ المَدِينَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.