தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-402

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்” என விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ மாலிக் அஷ்ஜயீ

(திர்மிதி: 402)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ:

قُلْتُ لِأَبِي: يَا أَبَةِ، «إِنَّكَ قَدْ صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، وَعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، هَاهُنَا بِالكُوفَةِ نَحْوًا مِنْ خَمْسِ سِنِينَ، أَكَانُوا يَقْنُتُونَ؟»، قَالَ: أَيْ بُنَيَّ مُحْدَثٌ؟


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-368.
Tirmidhi-Shamila-402.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-368.




மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-27210 .

8 comments on Tirmidhi-402

  1. ஸலாம் அலைக்கும் .
    வித்ரில் குனூத் ஓதுவது சம்பந்தமான ஹதீத் பலகீனம் என்கிறார்களே உண்மையா ?

  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    பெண்களுக்கு சொர்க்கத்தில் கொடுக்கப்படும் அந்தஸ்துகளை கூறும் ஹதீஸ்களை ஷேர் செய்யவும்

      1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ தங்களுடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன் ஜஸாக்கல்லாஹ்

        1. வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

          தற்போது நமது பயான் சைட்டில் சில பணிகள் நடைப்பெறுவதாலும், அத்துடன் அதில் உள்ள சில செய்திகளை மட்டுமே தற்போது பதிவு செய்கிறோம் என்பதால் அது முடிந்த பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம். நீங்கள் நமது பயான் சைட்டில் தேடிப்பார்க்வும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      நமது பயான் சைட்டில் நீங்கள் வார்த்தையை டைப் செய்து தேடிப்பார்க்கலாம்.

      பெண்க சொர்க்கம் என்று டைப் செய்து தேடிப்பார்த்தால் நீங்கள் கேட்ட தகவல் கிடைக்கலாம்.

      பயான்ஆப் எனும் ஆன்ட்ராய்ட் ஆப்பில் அல்லது நமது ஹதீஸ் சைட்டில் லின்காக உள்ள, பயான் குறிப்புகள் வெப்ஸைட் எனும் தளத்தில் தேடல் முறைப்பற்றி கூறப்பட்டிருக்கும். அதைப் பார்க்கவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.