தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3136

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ மூஸா அல்-அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டு விட்ட செய்தி நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே, நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி(ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூ புர்தா அவர்களும் மற்றொருவர் அபூ ருஹ்கி அவர்களுமாவர். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். ‘என் குலத்தாரில் ஐம்பதிற்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்’ என்றோ, ‘ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்’ என்றோ என் தந்தை அபூ மூஸா(ரலி) சொன்னார்கள் என்று நான் நினைக்கிறேன்’ என அறிவிப்பாளர் அபூ புர்தா(ரஹ்) கூறினார் –

நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் மன்னர் நஜாஷீயிடம் எங்களை இறக்கிவிட்டது. அவரிடம் (அபிசீனியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களையும் அவர்களின் சகாக்களையும் தற்செயலாகச் சந்தித்தோம். ஜஅஃபர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை இங்கு அனுப்பி (இங்கேயே) தங்கும்படி உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, நீங்களும் எங்களுடன் (இங்கேயே) தங்குங்கள்’ என்று கூறினார்கள்.

எனவே, நாங்கள் அவருடன் தங்கினோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) சென்றோம். நபி(ஸல்) அவர்கள் கைபரை வென்றபோது அவர்களைச் சென்றடைந்தோம். உடனே அவர்கள் (கைபர் போரில் கிடைத்த பொருட்களில்) எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள். அல்லது எங்களுக்கும் அதிலிருந்து கொடுத்தார்கள். கைபர் வெற்றியில் கலந்து கொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை. தம்முடன் (அதில்) பங்கெடுத்தவர்களுக்கு மட்டும் தான். பங்கிட்டுத் தந்தார்கள். ஆனால், எங்கள் கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் ஜஅஃபர்(ரலி) அவர்களுடனும் அவர்களின் சகாக்களுக்கடனும் (சேர்த்துப்) பங்கிட்டுத் தந்தார்கள்.
Book :57

(புகாரி: 3136)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

بَلَغَنَا مَخْرَجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ بِاليَمَنِ، فَخَرَجْنَا مُهَاجِرِينَ إِلَيْهِ، أَنَا وَأَخَوَانِ لِي أَنَا أَصْغَرُهُمْ، أَحَدُهُمَا أَبُو بُرْدَةَ، وَالآخَرُ أَبُو رُهْمٍ – إِمَّا قَالَ: فِي بِضْعٍ، وَإِمَّا قَالَ: فِي ثَلاَثَةٍ وَخَمْسِينَ، أَوِ اثْنَيْنِ وَخَمْسِينَ رَجُلًا مِنْ قَوْمِي -، فَرَكِبْنَا سَفِينَةً، فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالحَبَشَةِ، وَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ وَأَصْحَابَهُ عِنْدَهُ، فَقَالَ جَعْفَرٌ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَنَا هَاهُنَا، وَأَمَرَنَا بِالإِقَامَةِ، فَأَقِيمُوا مَعَنَا، فَأَقَمْنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا جَمِيعًا، فَوَافَقْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ افْتَتَحَ خَيْبَرَ، فَأَسْهَمَ لَنَا، أَوْ قَالَ: فَأَعْطَانَا مِنْهَا، وَمَا قَسَمَ لِأَحَدٍ غَابَ عَنْ فَتْحِ خَيْبَرَ مِنْهَا شَيْئًا، إِلَّا لِمَنْ شَهِدَ مَعَهُ، إِلَّا أَصْحَابَ سَفِينَتِنَا مَعَ جَعْفَرٍ وَأَصْحَابِهِ، قَسَمَ لَهُمْ مَعَهُمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.