ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஜிஇர்ரானா’வில் வைத்து போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் அவர்களிடம், ‘நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(இறைத் தூதராகிய) நானே நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் (என்னைப் பின்பற்ற வேண்டிய) நீ வழிதவறிப் போய் விடுவாய்’ என்று பதிலளித்தார்கள்.
Book :57
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ غَنِيمَةً بِالْجِعْرَانَةِ، إِذْ قَالَ لَهُ رَجُلٌ: اعْدِلْ، فَقَالَ لَهُ: «لَقَدْ شَقِيتُ إِنْ لَمْ أَعْدِلْ»
சமீப விமர்சனங்கள்