பாடம் : 17 நபி (ஸல்) அவர்கள் பனூ முத்தலிப் மற்றும் பனூ ஹாஷிம் குலத்தினருக்கு கைபருடைய குமுஸிலிருந்து பங்கிட்டுத் தந்தது, குமுஸ் தலைவருக்குரியது; அதை அவர் தம் உறவினர்களில் (தாம் விரும்பிய) சிலருக்கு மட்டும் தரலாம்’ என்பதற்கு ஆதாரமாகும்.
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம் உறவினர்கள் அனைவருக்குமே (குமுஸிலிருந்து) கொடுக்கவில்லை. மிகவும் ஏழ்மையாக இருப்பவர்களை விட்டுவிட்டு தம் (நெருங்கிய) உறவினர்களுக்கு மட்டுமே கொடுக்கவுமில்லை.
கொடுக்கப்பட்டவர் தூரத்து உறவினராக இருந்தாலும், அவர் தம் தேவையை முறையிட்டதால் அவருக்கே நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். தம்முடன் ஒத்துழைத்தவர்களுக்கு அவர்களுடைய குலத்தினராலும் அவர்களுடைய ஒப்பந்தக் குலங்களாலும் துன்பம் ஏற்பட்ட காரணத்தால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள்.
ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நானும் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! பனூ முத்தலிப் கிளையாருக்கு (குமுஸிலிருந்து) கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல் விட்டு விட்டீர்கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவு முறை உடையவர்கள் தாமே?’ என்று கேட்டோம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பனூ முத்தலிபும் பனூ ஹாஷிமும் ஒருவர் தாம்’ என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘பனூ அப்தி ஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி(ஸல்) அவர்கள் (குமுஸில்) பங்கு தரவில்லை’ என்று ஜுபைர்(ரலி) கூறினார்.
‘பனூ அப்தி ஷம்ஸ், பனூ ஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் ஆகியோர் (ஒருவருக்கொருவர்) தாய் வழிச் சகோதரர்கள் ஆவர். அவர்களின் தாயார் ஆத்திகா பின்த்து முர்ரா என்பவராவார். நவ்ஃபல் என்பவர் இந்தக் குலங்களின் தந்தை வழிச் சகோதராவார்’ என்று இப்னு இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
Book : 57
بَابٌ: وَمِنَ الدَّلِيلِ عَلَى أَنَّ الخُمُسَ لِلْإِمَامِ «وَأَنَّهُ يُعْطِي بَعْضَ قَرَابَتِهِ دُونَ بَعْضٍ» مَا قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَنِي المُطَّلِبِ، وَبَنِي هَاشِمٍ مِنْ خُمُسِ خَيْبَرَ
قَالَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ: ” لَمْ يَعُمَّهُمْ بِذَلِكَ، وَلَمْ يَخُصَّ قَرِيبًا دُونَ مَنْ هُوَ أَحْوَجُ إِلَيْهِ، وَإِنْ كَانَ الَّذِي أَعْطَى لِمَا يَشْكُو إِلَيْهِ مِنَ الحَاجَةِ، وَلِمَا مَسَّتْهُمْ فِي جَنْبِهِ، مِنْ قَوْمِهِمْ وَحُلَفَائِهِمْ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ المُسَيِّبِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ
مَشَيْتُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ أَعْطَيْتَ بَنِي المُطَّلِبِ وَتَرَكْتَنَا، وَنَحْنُ وَهُمْ مِنْكَ بِمَنْزِلَةٍ وَاحِدَةٍ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا بَنُو المُطَّلِبِ، وَبَنُو هَاشِمٍ شَيْءٌ وَاحِدٌ» قَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، وَزَادَ، قَالَ جُبَيْرٌ: وَلَمْ يَقْسِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَنِي عَبْدِ شَمْسٍ، وَلاَ لِبَنِي نَوْفَلٍ، وَقَالَ ابْنُ إِسْحَاقَ: عَبْدُ شَمْسٍ، وَهَاشِمٌ، وَالمُطَّلِبُ إِخْوَةٌ لِأُمٍّ، وَأُمُّهُمْ عَاتِكَةُ بِنْتُ مُرَّةَ، وَكَانَ نَوْفَلٌ أَخَاهُمْ لِأَبِيهِمْ
சமீப விமர்சனங்கள்