தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-2729

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அப்துல்லாஹ் பின் மவ்ஹப் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்.

மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்து விடுவார். (அவருக்கு லாபமும் இல்லை, நட்டமும் இல்லை) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை செவியேற்றுள்ளேன். இதற்கு பின்பும் இந்த நீதிபதி பொறுப்பிற்கு நான் ஆசைப்படுவேனா? என்று உஸ்மான் (ரலி) அவர்களுக்கு பதிலளித்தார்கள்…

(almujam-alawsat-2729: 2729)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ قَالَ: نا أُمَيَّةُ قَالَ: نا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي جَمِيلَةَ، يُحَدِّثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ،

أَنَّ عُثْمَانَ قَالَ لِابْنِ عُمَرَ: اذْهَبْ فَكُنْ قَاضِيًا، فَقَالَ: أَوَتُعْفِينِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَهْلٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا عَالِمًا فَقَضَى بِحَقٍّ أَوْ بعَدْلٍ، سَأَلَ التَّفَلُّتَ كَفَافًا» فَمَا أَرْجُو مِنْهُ بَعْدَ هَذَا؟

لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ مُعْتَمِرٌ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-2729.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-2805.




إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات عدا عبد الملك بن أبي جميلة وهو مجهول الحال

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல் மலிக் பின் அபீ ஜமீலா அறியப்படாதவர். மேலும் திர்மிதீ அவர்களே அப்துல்லாஹ் பின் மவ்ஹப் உஸ்மான் (ரலி) யிடமிருந்து அறிவிப்பது முர்ஸல் என்று தனது இலலுத்திர்மிதீயில் கூறியுள்ளார்கள். இந்த அப்துல்லாஹ் பின் மவ்ஹப் தான் யஸீத் பின் அப்துல்லாஹ் பின் மவ்ஹப் என்று சிலர் கூறியுள்ளனர். இவரின் நம்பகத்தன்மை நீருபிக்கப்படவில்லை. எனவே இது பலவீனமான செய்தி.

قال ابن أبي حاتم : يزيد بن موهب الأملوكي ، عن مالك بن يخامر ، وعنه ابنه موسى ، فلعله هذا . قلت : ليس هو هذا ، بل هذا يزيد بن عبد الله بن موهب ، نسب لجده .
تعجيل المنفعة بزوائد رجال الأئمة الأربعة: (2 / 379)

மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-475 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.