தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3164

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை), ‘நம்மிடம் பஹ்ரைனின் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று (மூன்று முறை) என்னிடம் சொல்லியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டிருந்தபோது பஹ்ரைனின் நிதி வர, அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் மரணமடைந்து விட்டிருந்)தால் அவர் என்னிடம் வரட்டும்’ என்று கூறினார்கள்.

உடனே நான் அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நம்மிடம் பஹ்ரைனின் செல்வம் வந்தால் உனக்கு இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள்’ என்று கூறினேன். உடனே அவர்கள் என்னிடம், ‘அதை அள்ளிப் போட்டுக் கொள்’ என்றார்கள். நான் அதை நிறைவாக அள்ளிப் போட்டுக் கொண்டேன். அவர்கள் என்னிடம், ‘அதை எண்ணிக் கொள்’ என்றார்கள். நான் அதை எண்ணிப் பார்த்தேன். அது ஐநூறு இருந்தது. எனவே, அவர்கள் எனக்கு (மொத்தம்) ஆயிரத்து ஐநூறு தந்தார்கள்.
Book :58

(புகாரி: 3164)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنِي رَوْحُ بْنُ القَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي

«لَوْ قَدْ جَاءَنَا مَالُ البَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا». فَلَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَاءَ مَالُ البَحْرَيْنِ، قَالَ أَبُو بَكْرٍ: مَنْ كَانَتْ لَهُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ فَلْيَأْتِنِي، فَأَتَيْتُهُ فَقُلْتُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كَانَ قَالَ لِي «لَوْ قَدْ جَاءَنَا مَالُ البَحْرَيْنِ لَأَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا» فَقَالَ لِي: احْثُهُ، فَحَثَوْتُ حَثْيَةً فَقَالَ لِي: عُدَّهَا، فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُ مِائَةٍ، فَأَعْطَانِي أَلْفًا وَخَمْسَ مِائَةٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.