பாடம் : 16 ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது எப்படி?
அல்லாஹ் கூறுகிறான்: எவரேனும் ஒரு கூட்டத்தினர் உங்களிடம் (ஒப்பந்தம் செய்து கொள்ள, அதன் பிறகு அவர்கள்) நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொள்வார்களோ என்று நீங்கள் அஞ்சினால் (அவர்களுடைய ஒப்பந்தத்தை) வெளிப்படையாக அவர்களிடமே எறிந்து விடுங்கள். (8:58)
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
என்னை அபூ பக்ர்(ரலி) ‘யவ்முன் நஹ்ர்’ (துல்ஹஜ் 10ம்நாள்) அன்று மதீனாவில் பொது அறிவிப்புகள் செய்பவர்களுடன் (அவர்களில் ஒருவனாக) அனுப்பினார்கள். (அவர்கள் செய்யச் சொன்ன பொது அறிவிப்பு இதுதான்:) இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லத்தை (கஅபாவை) நிர்வாணமாக எவரும் வலம்வரக் கூடாது.
மேலும், ‘ஹஜ்ஜுல் அக்பர் (பெரிய ஹஜ்)’ உடைய நாள் என்பது இந்த ‘யவ்முன் நஹ்ர்’ (துல்ஹஜ் 10ம் நாள்) தான். இது, ‘பெரிய ஹஜ்’ என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம் மக்கள் (உம்ராவைச்) ‘சிறிய ஹஜ்’ என்று அழைத்ததேயாகும். அபூ பக்ர்(ரலி) அந்த ஆண்டில் (இணை வைக்கும்) மக்களிடம் (இஸ்லாமிய அரசு செய்த) ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக அறிவித்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜத்துல் வதா’ செய்த ஆண்டில் இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யவில்லை.
Book : 58
بَابٌ: كَيْفَ يُنْبَذُ إِلَى أَهْلِ العَهْدِ
وَقَوْلِ اللَّهِ سُبْحَانَهُ: {وَإِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ} [الأنفال: 58] الآيَةَ
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ
بَعَثَنِي أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فِيمَنْ يُؤَذِّنُ يَوْمَ النَّحْرِ بِمِنًى: «لاَ يَحُجُّ بَعْدَ العَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ، وَيَوْمُ الحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ»، وَإِنَّمَا قِيلَ الأَكْبَرُ مِنْ أَجْلِ قَوْلِ النَّاسِ: الحَجُّ الأَصْغَرُ، فَنَبَذَ أَبُو بَكْرٍ إِلَى النَّاسِ فِي ذَلِكَ العَامِ، فَلَمْ يَحُجَّ عَامَ حَجَّةِ الوَدَاعِ الَّذِي حَجَّ فِيهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُشْرِكٌ
சமீப விமர்சனங்கள்