தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3180

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார்.

(ஒரு முறை) அபூ ஹுரைரா(ரலி), ‘திம்மீகளிடமிருந்து (இஸ்லாமிய அரசின் பிரஜைகளான பிற மதத்தாரிடமிருந்து) ஒரேயொரு தங்க நாணயத்தையோ பொற்காசையோ கூடப் பெற முடியாத காலம் வரும்போது உங்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்டார்கள்.

உடனே, ‘அபூ ஹுரைராவே! அவ்வாறு (ஒரு காலம்) ஏற்படும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூ ஹுரைரா(ரலி), ‘ஆம், அபூ ஹுரைராவின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இதை நான் உண்மையே அறிவிக்கப்பட்டு, உண்மையே பேசிய (நபிய)வர்களிடமிருந்து கேட்டுத்தான் சொல்கிறேன்’ என்று பதிலளித்தார்கள்.

உடனே மக்கள், ‘எதனால் அத்தகைய காலம் ஏற்படும்?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), ‘அல்லாஹ்வின் (அடைக்கலப்) பொறுப்பும் அல்லாஹ்வின் தூதருடைய (அடைக்கலப்) பொறுப்பும் அவமதிக்கப்படும். (அதாவது முஸ்லிம்கள் ஒப்பந்தப்படி நடக்காமல் நம்பிக்கை மோசடி செய்வார்கள்.) அதனால் அல்லாஹ் (பிற மதங்களைச் சேர்ந்த) ஒப்பந்தப் பிரஜைகளின் உள்ளங்களுக்குத் துணிவைத் தந்து விடுவான். அவர்கள் தங்கள் கரங்களில் இருப்பவற்றைத் தடுத்துக் கொள்வார்கள். (ஜிஸ்யா வரி கட்ட மறுத்துப் போர் புரியவும் துணிந்து விடுவார்கள்.)
Book :58

(புகாரி: 3180)

قَالَ أَبُو مُوسَى، حَدَّثَنَا هَاشِمُ بْنُ القَاسِمِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

كَيْفَ أَنْتُمْ إِذَا لَمْ تَجْتَبُوا دِينَارًا وَلاَ دِرْهَمًا؟ فَقِيلَ لَهُ: وَكَيْفَ تَرَى ذَلِكَ كَائِنًا يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: إِي [ص:103] وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ، عَنْ قَوْلِ الصَّادِقِ المَصْدُوقِ، قَالُوا: عَمَّ ذَاكَ؟ قَالَ: تُنْتَهَكُ ذِمَّةُ اللَّهِ، وَذِمَّةُ رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَشُدُّ اللَّهُ عَزَّ وَجَلَّ قُلُوبَ أَهْلِ الذِّمَّةِ، فَيَمْنَعُونَ مَا فِي أَيْدِيهِمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.