தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6811

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) கூறியதாவது:

நான், ‘இறைத்தூதர் அவர்களே! மிகப் பெரிய பாவம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்’ என்று சொன்னார்கள். ‘பிறகு, எது (பெரிய பாவம்)?’ என்று கேட்டேன். அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என்பதற்காக அதை நீயே கொலை செய்வதாகும்’ என்றார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்றார்கள்.

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பாளர் அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அன்னார் (அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுக்கும், அபூவாயில் (ரஹ்) அவர்களுக்கும் இடையே அபூமைஸரா (ரஹ்) அவர்கள் இடம்பெறாத) அறிவிப்பாளர்தொடரை விட்டுவிடுக!விட்டுவிடுக! என்று கூறினார்கள்.

(குறிப்பு: அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறியதற்கு காரணம், அபூவாயில் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகவே பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். ஆனால் இந்த ஹதீஸை அவர் நேரடியாக கேட்கவில்லை. அபூமைஸரா —> அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் கேட்டுள்ளார் என்பதாலாகும்)

(புகாரி: 6811)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «أَنْ تَقْتُلَ وَلَدَكَ مِنْ أَجْلِ أَنْ يَطْعَمَ مَعَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»

قَالَ يَحْيَى: وَحَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مِثْلَهُ. قَالَ عَمْرٌو: فَذَكَرْتُهُ لِعَبْدِ الرَّحْمَنِ، وَكَانَ حَدَّثَنَا عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، وَمَنْصُورٍ، وَوَاصِلٍ عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَيْسَرَةَ قَالَ: «دَعْهُ دَعْهُ»


Bukhari-Tamil-6811.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6811.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




2 comments on Bukhari-6811

    1. உங்கள் மீது ஏக இறைவனின் அருள் உண்டாவதாக.

      தாங்கள் எதிர்பார்க்கும் விளக்கம் என்ன?

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.