தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22398

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஹுபைரா என்பவரின் மகள் (ஹிந்த்) அல்லாஹ்வின் தூதரிடத்தில் கனமான தங்க மோதிரங்கள் கையில் வைத்திருந்தவராக வந்தார். அப்பெண்னின் கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறையிட்டாள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள், தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ஹஸனின் தந்தை (அலி ரலி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் எனக் கூறினார்.

பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.

உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையை கடையில் விற்றுவிட்டு வருமாறு ஆளப்பினார்கள். மாலையை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் எனக் கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 22398)

حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنِي زَيْدُ بْنُ سَلَّامٍ، أَنَّ جَدَّهُ حَدَّثَهُ، أَنَّ أَبَا أَسْمَاءَ حَدَّثَهُ، أَنَّ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُ

أَنَّ: ابْنَةَ هُبَيْرَةَ دَخَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا خَوَاتِيمُ مِنْ ذَهَبٍ، يُقَالُ لَهَا الْفَتَخُ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَعُ يَدَهَا بِعُصَيَّةٍ مَعَهُ يَقُولُ لَهَا: «أَيَسُرُّكِ أَنْ يَجْعَلَ اللَّهُ فِي يَدِكِ خَوَاتِيمَ مِنْ نَارٍ؟» فَأَتَتْ فَاطِمَةَ فَشَكَتْ إِلَيْهَا مَا صَنَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَانْطَلَقْتُ أَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ خَلْفَ الْبَابِ، وَكَانَ إِذَا اسْتَأْذَنَ قَامَ خَلْفَ الْبَابِ قَالَ: فَقَالَتْ لَهَا فَاطِمَةُ: انْظُرِي إِلَى هَذِهِ السِّلْسِلَةِ الَّتِي أَهْدَاهَا إِلَيَّ أَبُو حَسَنٍ. قَالَ: وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ ذَهَبٍ، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا فَاطِمَةُ بِالْعَدْلِ أَنْ يَقُولَ النَّاسُ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ، وَفِي يَدِكِ سِلْسِلَةٌ مِنْ نَارٍ؟» ثُمَّ عَذَمَهَا عَذْمًا شَدِيدًا، ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ، فَأَمَرَتْ بِالسِّلْسِلَةِ فَبِيعَتْ فَاشْتَرَتْ بِثَمَنِهَا عَبْدًا فَأَعْتَقَتْهُ، فَلَمَّا سَمِعَ بِذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ وَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّى فَاطِمَةَ مِنَ النَّارِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22398.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21810.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் அபீகஸீர், ஸைத் பின் ஸல்லாமிடம் நேரடியாக செவியேற்கவில்லை. அவரின் சகோதரர் முஆவியா பின் ஸல்லாமின் நூலிலிருந்து அறிவித்துள்ளார். அவ்வாறு அறிவித்தது ஸைத் பின் ஸல்லாமின் அனுமதியுடன் தான் என்பதால் ஹத்தஸனீ- எனக்கு அறிவித்தார் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை இப்னுல் கத்தான் அவர்கள் அல்வஹ்ம் வல்ஈஹாம் என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
  • தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்து விட்டால் நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது இந்த ஹதீஸின் கருத்து.
  • ஆரம்ப காலத்தில் இவ்வாறு சட்டம் இருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது. பார்க்க : புகாரி-1404 .

இதே செய்தி வேறு சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்க்க : தயாலிஸீ-1083 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20863 , ராஹவைஹி-2106 , அஹ்மத்-22398 , நஸாயீ-5140 , 5141 , குப்ரா நஸாயீ-9378 , 9379 , அல்முஃஜமுல் கபீர்-1448 , ஹாகிம்-4725 , 4729 , குப்ரா பைஹகீ-7556 , 7557 ,

மேலும் பார்க்க: பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.