தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ishaq-Ibn-Rahawayh-242

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு தடவை நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காப்புகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நெருப்பாலான இரு காப்புகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள். அதற்கு அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காதணிகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நெருப்பாலான இரு காதணிகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள்.

அதற்கு அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் அலங்காரம் செய்யாமல்  இருந்தால் கணவனிடத்தில் எந்த மதிப்பும் இல்லையே என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வெள்ளியினால் காதணி செய்து அதற்கு அபீர், அல்லது குங்குமப்பூவின் மூலம் தங்கத்தை போன்ற நிறமிட்டு அணிவதை யாரும் தடுக்கவில்லையே என்று கூறினார்கள்.

 

(musnad-ishaq-ibn-rahawayh-242: 242)

أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِي الْجَهْمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:

كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَسِوَارَانِ مِنْ ذَهَبٍ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسِوَارَانِ مِنْ نَارٍ» ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ: قُرْطَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُرْطَانِ مِنْ نَارٍ» ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْمَرْأَةَ إِذَا لَمْ تَزَّيَّنَ لِزَوْجِهَا صَلِفَتْ عِنْدَهُ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَا يَمْنَعُكُنَّ أَنْ تَجْعَلَ قُرْطَيْنِ مِنْ فِضَّةٍ وَتُصَفِّرِيهِ بِعَبِيرٍ أَوْ زَعْفَرَانٍ فَيَكُونَ كَأَنَّهُ ذَهَبٌ»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-Tamil-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-TamilMisc-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Shamila-242.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Alamiah-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-JawamiulKalim-199.




  • இதில் முதர்ரிஃபிடமிருந்து ஜரீர் பின் அப்துல் ஹமீத் அறிவிக்கிறார். இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களுக்கும், அபூஜஹ்முக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
  • முதர்ரிஃபிடமிருந்து அஸ்பாத் பின் முஹம்மது, காலித் பின் அப்துல்லாஹ் போன்றோர் அறிவிக்கும் செய்தியில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களுக்கும், அபூஜஹ்முக்கும் இடையில் அபூஸைத் என்பவர் கூறப்பட்டுள்ளார். எனவே இந்த அறிவிப்பாளர்தொடரே ஏற்றுக்கொள்ளப்படும். பார்க்க : நஸாயீ-5142 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.