தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6498

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“யார் இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வருகிறாரோ அவரை, அவை சுவர்க்கத்தில் நுழையச்செய்யும். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிமையானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டு நற்செயல்களும் எவைகள்? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முதல் நற்செயல்) நீ ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும், ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

அவ்விரண்டில் இரண்டாவது  நற்செயல், நீ தூங்கும் முன் படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ்,  என்று நூறு தடவை கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பதும், படுக்கையில் ஓதும் திக்ருகள் நூறு தடவையும் சேர்த்து) 250-இருநூற்றி ஐம்பது நன்மைகளாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

“உங்களில் யார் தான்  ஒரு நாளில் இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அடுத்து நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவ்விரண்டு நற்செயல்களை கடைப்பிடிப்பவர்கள் குறைவானர்கள் தான் என்று எப்படி நீங்கள் கூறுகின்றீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தொழுகையில் இருக்கும் போது ஷைத்தான் அவரிடம் வந்து  ‘இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,’ என்று சொல்லிக் கொண்டு இருப்பான். இறுதியில் அவர் (தொழுகை முடிந்து மேற்கண்ட தஸ்பீஹ்களை கூறாமல்) சென்று விடுவார். மேலும் உங்களில் ஒருவர் படுக்கைக்கு செல்லும் போது அவரை  ஷைத்தான் தூங்கச் செய்துக்கொண்டே இருப்பான். இறுதியில் (அவர் மேற்கண்ட தஸ்பீஹ்களை கூறாமல் தூங்கிவிடுவார்,” என்று பதிலளித்தார்கள்.

 

இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது அதை) கையால் (விரல்களால்) எண்ணி செய்வதை பார்த்தேன் என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 6498)

حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

خَلَّتَانِ مَنْ حَافَظَ عَلَيْهِمَا، أَدْخَلَتَاهُ الْجَنَّةَ، وَهُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ» قَالُوا: وَمَا هُمَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَحْمَدَ اللَّهَ وَتُكَبِّرَهُ وَتُسَبِّحَهُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ عَشْرًا، عَشْرًا، وَإِذَا أَوَيْتَ إِلَى مَضْجَعِكَ تُسَبِّحُ اللَّهَ وَتُكَبِّرُهُ وَتَحْمَدُهُ مِائَةَ مَرَّةٍ، فَتِلْكَ خَمْسُونَ وَمِائَتَانِ بِاللِّسَانِ، وَأَلْفَانِ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ، وَخَمْسَ مِائَةِ سَيِّئَةٍ؟» قَالُوا: كَيْفَ مَنْ يَعْمَلُ بِهَا قَلِيلٌ؟ قَالَ: «يَجِيءُ أَحَدَكُمُ الشَّيْطَانُ فِي صَلَاتِهِ، فَيُذَكِّرُهُ حَاجَةَ كَذَا وَكَذَا، فَلَا يَقُولُهَا، وَيَأْتِيهِ عِنْدَ مَنَامِهِ، فَيُنَوِّمُهُ، فَلَا يَقُولُهَا» قَالَ: وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهُنَّ بِيَدِهِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6498.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6319.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்களிடமிருந்து ஜரீர் செவியேற்றது அதாஉ பின் ஸாயிப் மூளை குழம்பியதற்கு பின் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-3410 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.