தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3306

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘பல்லி தீங்கிழைக்கக் கூடியது’ என்றார்கள். அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை.

நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டதாக ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம்: 59

(புகாரி: 3306)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لِلْوَزَغِ الفُوَيْسِقُ» وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ
وَزَعَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِهِ


Bukhari-Tamil-3306.
Bukhari-TamilMisc-3306.
Bukhari-Shamila-3306.
Bukhari-Alamiah-3061.
Bukhari-JawamiulKalim-3081.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
(2. மிகப் பலமானவர்)
.

2 . ஸயீத் பின் கஸீர் பின் உஃபைர் (3. பலமானவர்).

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்-அல்குரஷீ (3. பலமானவர்).

4 . யூனுஸ் பின் யஸீத்-அல்அய்லீ (3. பலமானவர்).

5 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப் (2. மிகப் பலமானவர்).

6 . உர்வா பின் ஸுபைர்-அல்அஸதீ (3. பலமானவர்).

7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
பின்த் அபூபக்ர் (ரலி)
(1. நபித்தோழர்)
.


யூனுஸ் அவர்கள் வழியாக வரும் இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதி முன்கதிஃ என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் கீழ்க்கண்ட தகவல் மூலம் தெரிகிறது.

فتح الباري لابن حجر (6/ 354)
قَوْلُهُ وَزَعَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ قَائِلُ ذَلِكَ يُحْتَمَلُ أَنْ يَكُونَ عُرْوَةَ فَيَكُونُ مُتَّصِلًا فَإِنَّهُ سَمِعَ مِنْ سَعْدٍ
وَيُحْتَمَلُ أَنْ تَكُونَ عَائِشَةَ فَيَكُونُ مِنْ رِوَايَةِ الْقَرِينِ عَنْ قَرِينِهِ
وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ مِنْ قَوْلِ الزُّهْرِيِّ فَيَكُونُ مُنْقَطِعًا وَهَذَا الِاحْتِمَالُ الْأَخِيرُ أَرْجَحُ
فَإِنَّ الدَّارَقُطْنِيَّ أَخْرَجَهُ فِي الْغَرَائِبِ من طَرِيق بن وهب عَن يُونُس وَمَالك مَعًا عَن بن شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْوَزَغِ فُوَيْسِقٌ
وَعَن بن شِهَابٍ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بقتل الوزغ
وَقد أخرج مُسلم وَالنَّسَائِيّ وبن ماجة وبن حبَان حَدِيث عَائِشَة من طَرِيق بن وهب وَلَيْسَ عِنْدَهُمْ حَدِيثُ سَعْدٍ وَقَدْ أَخْرَجَ مُسْلِمٌ وَأَبُو دَاوُد وَأحمد وبن حِبَّانَ مِنْ طَرِيقِ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا
وَكَأَنَّ الزُّهْرِيَّ وَصَلَهُ لِمَعْمَرٍ وَأَرْسَلَهُ لِيُونُسَ وَلَمْ أَرَ مَنْ نَبَّهَ عَلَى ذَلِكَ مِنْ الشُّرَّاحِ وَلَا مِنْ أَصْحَابِ الْأَطْرَافِ فَلِلَّهِ الْحَمْدُ

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
இமாம் கூறுகிறார்:

(இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியான) “ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) இவ்வாறு கருதினார்-கூறினார்” என்பதின் விளக்கம்:

1 . இதை அறிவிப்பவர் உர்வா (ரஹ்) அவர்களாக இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறெனில் இந்த இரண்டாவது பகுதியின் அறிவிப்பாளர்தொடர் ‘முத்தஸில்-இடைமுறிவு ஏற்படாத அறிவிப்பாளர்தொடர்’ ஆகும்; ஏனெனில் உர்வா அவர்கள் ஸஃத் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸ்களை கேட்டுள்ளார்.

2 . அல்லது, அந்தச் சொற்களைக் கூறியவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு; அவ்வாறெனில் அது, சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர் மற்றொருவர் வாயிலாக அறிவிப்பதாக அமையும்.

3 . அல்லது இது ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்கவும் இடமுண்டு; அவ்வாறெனில் (யூனுஸ் வழியாக வரும்) இந்த அறிவிப்பாளர்தொடர் ‘முன்கதிஃ’ (அதாவது, அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்பட்டதாக) ஆகும்.

இந்த மூன்றில் மூன்றாவதாகக் கூறப்பட்ட இந்தக் கருத்தே முன்னுரிமை பெற்றதாகும்.

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
(ரஹ்) அவர்கள் ‘அல்ஃகராஇப்’ நூலில் பதிவு செய்துள்ள கீழ்க்கண்ட சில அறிவிப்பாளர்தொடர்களின் படி இவ்வாறு முடிவு செய்ய வேண்டியுள்ளது:

1 . இப்னு வஹ்ப் —> யூனுஸ், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
—> இப்னு ஷிஹாப் —> உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் “நபி (ஸல்) அவர்கள் பல்லியை ‘புவைஸிக்-தீங்கிழைக்கக்கூடியது’ என்று குறிப்பிட்டார்கள்” என்று ஒரு ஹதீஸையும்,

2 . அதே இப்னு ஷிஹாப் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், “நபி (ஸல்) அவர்கள் பல்லியை கொல்லுமாறு கட்டளையிட்டார்கள்” என்று மற்றொரு ஹதீஸையும் அவர் பதிவு செய்துள்ளார்.

3 . முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு மாஜா, இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஆகியோரது நூல்களில் இப்னு வஹ்ப் வழியாக ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களின் ஹதீஸ் மட்டுமே இடம்பெற்றுள்ளது; அவர்களிடம் ஸஃத் (ரலி) அவர்களின் ஹதீஸ் இல்லை.

4 . ஆனால் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஆகியோர் மஃமர் —> ஸுஹ்ரீ —> ஆமிர் பின் ஸஃத் —> அவரின் தந்தை-ஸஃத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், “நபி (ஸல்) அவர்கள் பல்லியை கொல்லுமாறு ஏவினார்கள், மேலும் அதை ‘புவைஸிக்-தீங்கிழைக்கக்கூடியது’ என்று குறிப்பிட்டார்கள்” என்ற செய்தியைப் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம், ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் செய்தி மஃமர் வழியாக ‘முத்தஸிலான-அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்படாத’ முறையில் வந்துள்ளது என்றும், யூனுஸ் அவர்கள் வழியாக வழியாக ‘தொடர் அறுபட்ட’ முறையில் வந்துள்ளது என்றும் தெளிவாகிறது.

இந்த நுணுக்கத்தை ஹதீஸ் விரிவுரையாளர்களோ அல்லது ஹதீஸ் தொகுப்பு ஆசிரியர்களோ எவரும் சுட்டிக்காட்டியதாக நான் காணவில்லை. அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-இப்னு ஹஜர்-6/354)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 340)
613- وَسُئِلَ عَنْ حَدِيثِ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَرَ بِقِتْلِ الْوَزَغِ
فَقَالَ: يُحَدِّثُ بِهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ.

قَالَهُ خَالِدٌ الْوَاسِطِيُّ عَنْهُ.
وَخَالَفَهُ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، فَرَوَاهُ عَنْهُ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنِ الزُّهْرِيِّ.
وَاخْتُلِفَ عَنْ مَعْمَرٍ، فَرَوَاهُ عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أبيه.
وَرَوَاهُ عَبْدُ الْأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعْدٍ لَمْ يَذْكُرْ بَيْنَهُمَا أَحَدًا.
وَكَذَلِكَ رَوَاهُ يُونُسُ، وَمَالِكٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعْدٍ.
وَهُوَ الصَّحِيحُ.
وَحَدَّثَ بِهِ الْبَاغَنْدِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، عَنْ خَالِدِ بْنِ مَخْلَدٍ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ. وَوَهِمَ فِيهِ.
وَرَوَاهُ يَحْيَى بْنُ أَبِي أُنَيْسَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ سَعْدٍ، وَوَهِمَ فِيهِ أَيْضًا، وَالصَّوَابُ الْمُرْسَلُ.
وَرَوَاهُ عُمَرُ بْنُ حَبِيبٍ الْقَاضِي، عن هشام بن عروة، عن أبيه، عن عَائِشَةَ، عَنْ سَعْدٍ.
وَلَمْ يُتَابِعْ عَلَيْهِ.

(நூல்: அல்இலலுல் வாரிதா-613, 4/340)

 


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி), ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஹ்ரீ —> உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) /// ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்- 24568, 25215, 26332, 26382, புகாரி-3306, 1831, முஸ்லிம்-4508, இப்னு மாஜா-3230, குப்ரா நஸாயீ- 3855, நஸாயீ-2886, …


  • ஸுஹ்ரீ —> ஆமிர் பின் ஸஃத் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8390, அஹ்மத்-1523, முஸ்லிம்-4507, அபூதாவூத்-5262, முஸ்னத் பஸ்ஸார்-1086, முஸ்னத் அபீ யஃலா-832, இப்னு ஹிப்பான்-5635, குப்ரா பைஹகீ-10048, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4509,


 

 


விமர்சன செய்திகள்:

2 . உம்மு ஷரீக் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-3359.

3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3231.

more…


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.