தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3337

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமுதாயத்தாரிடம் தூதராக அனுப்பினோம் என்னும் (11:25)இறை வசனம்.

நாம் நூஹை, உங்களுடைய சமுதாயத்திற்கு வேதனை வருவதற்கு முன்பாகவே அவர்களை எச்சரிக்கை செய்வீராக! என்ற செய்தியுடன் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம் என்னும் (71:1)வசனம் முதல் அத்தியாயத்தின் இறுதி (71:28) வரை.

மேலும், (நபியே!) இவர்களுக்கு நூஹுடைய செய்தியை எடுத்துரைப்பீராக! அவர் தன் சமுதாயத்தினரை நோக்கிக் கூறினார்: என் சமுதாயத்தாரே, நான் உங்களிடையே வாழ்வதையும் அல்லாஹ்வின் வசனங்களை (அவ்வப் போது) எடுத்துரைத்து நினைவூட்டிக் கொண்டிருப்பதையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை யென்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றேன்…. (10:71,72) என்னும் இறை வசனம்.

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள். அப்போது, ‘நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத்தாரை எச்சரிக்காமலிருந்ததில்லை.

நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு (அவனைக் குறித்து) எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், நான் அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்குக் கூறாத ஓர் அடையாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்கள்.
Book : 60

(புகாரி: 3337)

بَابُ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ} [هود: 25]

قَالَ ابْنُ عَبَّاسٍ: (بَادِئَ الرَّأْيِ): «مَا ظَهَرَ لَنَا»، {أَقْلِعِي} [هود: 44]: «أَمْسِكِي»، {وَفَارَ التَّنُّورُ} [هود: 40]: نَبَعَ المَاءُ وَقَالَ عِكْرِمَةُ: وَجْهُ الأَرْضِ وَقَالَ مُجَاهِدٌ: {الجُودِيُّ} [هود: 44]: جَبَلٌ بِالْجَزِيرَةِ، {دَأْبٌ} [غافر: 31]: مِثْلُ حَالٌ

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ} [نوح: 1]- إِلَى آخِرِ السُّورَةِ {وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَقَامِي وَتَذْكِيرِي بِآيَاتِ اللَّهِ} [يونس: 71]- إِلَى قَوْلِهِ – {مِنَ المُسْلِمِينَ} [يونس: 72]

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَالِمٌ:، وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ: ” إِنِّي لَأُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنِّي أَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ: تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.